பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ_ளுக்கு ஓய்வூதியத்திட்டம் 41 "ஆசிரியர்களுக்கு நன்மை செய்யத் தொடங்கினால், அதை அவர்களோடு நிறுத்திவிட முடியுமா?! மற்றவர்கள் கேட்பார்கள்: கொடுப்போம்” என்று சிரித்தபடியே காமராசர் கூறினார். "மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள். அரசின் செயலகத்தால் ஆய்வு செய்யப்படாத இத் திட்டத்தை இந்த ஆண்டு தள்ளிப் போடுங்கள். சம்பந்தப்பட்ட செயலகங்கள் பார்த்தபிறகு ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மறுபடியும் குறுக்கிட்டார் அந்த மூத்த அலுவலர் ■ அப்படிக் குறுக்கிட்டவர், தலைமைச் செயலர் அல்லர். கல்விச் செயலர் அல்லர். நிதிச் செயலரும் அல்லர்! இருப்பினும் முதலமைச்சர் எரிச்சல் கொள்ளவில்லை. பொறுமை காத்தார். முடிவு என்ன? "இப்போதைக்குத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று நன்மைத் திட்டத்தைக் கொண்டுவாருங்கள்; உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்தலாம்” என்று முதலமைச்சர் முடிவு சொன்னார். "சரியென்று நிதிச் செயலர் ஏற்றுக்கொண்டார். நான் குறுக்கிட்டுப் பேச முயன்றேன். முதல்வர், புன்னகையோடு, 'உதவி படிப்படியாக இருக்கட்டும்” என்றதும், நான் அமைதி கொண்டேன். அமுதமே யானாலும் ஒரேயடியாக அள்ளி விழுங்க முடியாதே! அதற்குப் பிறகும் மூன்று நன்மைத் திட்டம் பற்றி நான் எந்த இடத்திலும் பேச்சு மூச்சு விடவில்லை. அரசு, அதை 1955-56 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சேர்த்து அதற்கான அறிக்கை வழி வெளியிட்டபோதே உலகம் அறியும். சட்ட மன்றத்தில் நிறைவேறியது சென்னை சட்ட மன்றத்தில், எந்தத் துறையின் நிதிக் கோரிக்கை ஆலோசனைக்கு வருகிறதோ, அத் துறையின் இயக்குநர் வந்து, அலுவலர்களுக்கான இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். கல்வித் துறையின் நிதிக்கோரிக்கை விவாதத்திற்கு வந்தபோது, கல்விச் செயலர், அவரது துணைச் செயலர்கள் ஆகியோர் வந்து இருந்தனர். நானும் சென்று இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/81&oldid=788650" இலிருந்து மீள்விக்கப்பட்டது