பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lituiesibătă, ஓய்வூதியத் திட்டம் 43 மூவரும் அறையில் அமர்ந்ததும், “எப்படிச் செயல் மதிப்பீடு போட்டீர்கள் என்ற விவரங்களை இவருக்குக் காட்டி விளக்குங்கள்” அவறார். நான் கணக்கைக் காட்டினேன். திரு. சண்முகம் அதை யமையாகப் படித்துப் பார்த்தார். ('[. படத்து == r இரண்டொரு இடங்களில் என்னிடம் ஆதாரங்கள் கேட்டார். ஏற்கெனவே வெளியான அரசு அறிக்கையில் இருந்து உரிய விவாங்களைச் சுட்டிக் காட்டினேன். இறுதியில்,“மதிப்பீடு சரிதான்.இத் திட்டத்தின் வாயிலாக மிக நiல காரியம் செய்கிறீர்கள். உங்களைப் பாராட்டுகிறேன். உங்களுக்கு நல்ல இயக்குநர் கிடைத்திருக்கிறார்” என்று முதல்வர் காமாரரிடம் கூறிவிட்டு, திரு. சண்முகம் பிள்ளை திருப்தியுடன் விடைபெற்றுக் கொண்டார். “இத் திட்டம் பற்றிய ஆணை விரைவில் வெளிவரவேண்டும். அதன்பேரிலும் ஒரு கண் வைத்திருங்கள். தேவைப்பட்டால் என் அவனத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டு ானை அனுப்பிவிட்டார் முதல்வர். திட்டம் நடைமுறைக்கு வந்தது திட்ட ஆணை பற்றி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கத் தேவை | liபடவில்லை. அரசுச் செயலர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்கள். வெள்ளைக்காரரிடம் பயிற்சி பெற்ற பெரிய அலுவலர்கள், ,தகைய போக்கினர்? எண்ணித் துணிக கருமம்' என்பதில் | பி.சி.கை உடையவர்கள். வதோவொன்று பற்றி அரசு முடிவு செய்வதற்குமுன்பு, பல கொணங்களில் இருந்து அதைப் பார்ப்பார்கள். என்ன தொல்லைகள் ஏற்படுமென்று அஞ்சாமல் காரணங்களுடன் எடுத்து உரைப்பார்கள் வாதிடுவார்கள். அாக முடிவு எடுத்தபின் விழிப்போடும், விறுவிறுப்போடும் நிறைவேற்ற முயல்வார்கள்; கீழறுப்பு வேலை செய்யமாட்டார்கள். அன்றைய சென்னை அரசில், அத்தகையோர் செயலர்களாக இருந்து செயல்பட்டதால் ஆணை பிறப்பிப்பதில், காலதாமதம் வl வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/83&oldid=788672" இலிருந்து மீள்விக்கப்பட்டது