பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாத்துரை - 35 குச் சென்று அங்குள்ள பாமரமக்களுக்கு அறிவு புகட்ட வேண்டும். முன்னேற்றம், சமாதானம், சமதர்மம், பகுத்தறிவு ஆகிய அழகான வார்த்தை களின் வாசனைகளை அவர்களும் நுகரும்படி செய்ய வேண்டும். இதுதான் அறிவுப் பிரசாரம்; அஞ் ஞானத்தை அறவே இந்த நாட்டை விட்டு ஒட்டும் மார்க்கம். ஆனால் இந்தப் பணி லேசானதல்ல; ஆபத்து நிறைந்தது. எந்த நேரமும் எதிர்ப்பு வர லாம். இதைச் செயலாற்றும் பொழுதுதான் உணரமுடியும். ஆகஸ்ட்டு 15-க்குப் பிறகு இன்னும் சீர்திருத் தம் பேசப்படுகிறது, பாடப்படுகிறது. "ஜாதிபேத மில்லை,""எல்லோரும் சமம்,”“எல்லோரும் இந்நாட்டு மன்னர்," "அடிமை யென்றும் ஏழையென்றும் யாருமில்லை நாட்டினில்” மதுரமான கீதம், செவிக்கு இனிமையான விருந்து, யாரும் பாடிவிடலாம். என்று எளிதில் கூறிவிடலாம். பாட ஆரம்பித் தால்த் தெரியும், சாரீரம் கெட்டிருப்பதும், மேளம் சத்தம் கேட்காததும், தாளம் ஒத்துழைக்க மறுப் பதும், கீதம் பாடுவதிலே உள்ள கஷ்டத்தை விட, கீதத்திலே உள்ள கருத்துக்களை தேசத்திலுள்ள மக்களுக்குப் போதிப்பதிலே உள்ள கஷ்டம் அதி கம். பகுத்தறிவுப் பிரசாரம் செய்ய விரும்புகிறவர் கள் நாட்டுப்புரத்திற்குச் சென்று பார்க்கவேண்டும். இன்னும் சாதி இருக்கிறது, பேதம் போக்கப்பட வில்லை; ஆண்டையும், அடிமையும் இருக்கிறார்கள்.” வைதீகம் என்னும் நோய் இருக்கிறது. இன்னும் மாறவில்லை என்பதைக் காண்பார்கள். வைதீகம் என்னும் நோய்க்குடாக்டர்கள் மருந்து கொடுத்துக்