உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நிலையும் நினைப்பும்


ஒண்ணாவது அதெல்லாம் பொய்' என்று சொல்லுகிறாகள் என்று வைத்துக்கொள்ளுவோம். உடனே "ஆமாங்க, அப்படித்தான் இங்க ஒருவரு சொன்னாரு, நல்லா படிச்சவரு, உங்களாட்டமே பேய், பிசாசுகளிடம் நம்பிக்கை இல்லையின்னு சொல்லுவாரு. ஒரு நாள் ராத்திரி அந்த சர்க்கார் சாவடியிலே படுக்கப் போகிறன்னாரு, எவ்வளவோ தடுத்தோம் முடியவில்லை. மீறி படுத்தாரு காலையிலே போய் பார்த்தா செத்துகிடக்காரு, கத்தியால குத்தினது மாதிரி வாயாலேயும் மூக்காலேயும் இரத்தம் வந்திருக்கு" என்ற கிராமத்தார்கள் கூறுவார்கள். மாணவர்கள் மனதிலே அவர்களுக்கு பிசாசிடம் நம்பிக்கை இல்லை என்றாலும் அல்லது பயமில்லை என்றாலும், கத்தியும் இரத்தமும் என்று கேட்டதும் அச்சம் தட்டும்; முகம் மாறுபடும், முகம் மாறுபடுவது மாத்திரமல்ல, கிராமத்து மக்களைப் பற்றி மாணவர்கள் மனதிலே கொண்ட நினைப்பும் மாற ஆரம்பிக்கும் ஏன்? அங்கு முதலியார்களைக் காண்பார்கள், படையாட்சிகளைக் காண்பார்கள், பறையர்களையும் காண்பார்கள், சாதிபேதமிருக்கும் சாஸ்திரியார்கள் இருப்பார்கள். அங்கு கோயில் குள ங்களில் தீண்டாமை அனுஷ்டிக்கப்படும். கிராம மக்களின் நிலை நாம் நினைக்கிறபடி இருப்பதில்லை. நம் நினைப்புக்கும், அவர்கள் நினைப்புக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கும். கிராமத்து மக்களைப் பார்த்து மாணவர்கள் வயலைக்காட்டி அதில் என்ன பயிர் என்பார்கள். "அதாங்க, நெல் பயிர் சீரகச்சம்பா, இது தெரியாதா?" என்பார்கள். மாணவர்கள் மேலும் பல பயிர்களைக் காட்டி இது