பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாத்துரை 45. விடுவார்கள். 'அற்புத சக்தியிடம்' உள்ள அபார நம்பிக்கையும் மதிப்பும் அவைகளிடமிருக்காது. ரேடியோவைப்பற்றிக் கூறுங்கள்; ஒருவர் இலண்ட னில் பேசுவதை நாம் கேட்கலாம் என்று கூறுங் கள்; டெலிவிஷனைப்பற்றிக் கூறுங்கள்; டெலி விஷன் மூலம் ம ஸ்கோவில் ஆடும் ஒரு மாதைப் பார்க்கலாம் என்று கூறுங்கள். ஏதோ கேட்பார் களே ஒழிய அதில் ஆச்சரியம் இருப்பதாக நினைக்க மாட்டார்கள். கூறும்பொழுது அப்படியா! என்று சொல்லுவார்கள்! அவ்வளவுதான். இவ்வளவை யும் கேட்டுவிட்டு திடிரென்று சொல்லுவார்கள்; "நீங்கள் இதிலெல்லாம் ஆச்சரியம் இருப்பதாகக் கூறுகிறீர்களே! என்ன ஆச்சரியம் இருக்கிறது? அங்கே ஒரு வேப்ப மரமுங்க, அதன் மகிமை, காயெல்லாம் கசக்காமல் தித்திக்குதுங்க; ஜனங்க கூட்டம் கூட்டமாப் போறங்க' என்று விஞ்ஞானத்திடம் இப்படி ஏன் அவர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை? காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டு கண்டு பிடிக்கவில்லை. பென்சிலினைக் கண்டு பிடித்தவர் எஙக அப்பா, அணுகுண்டை கண்டுபிடித்தவர் எங்கள் அண்ணன், ரேடியோவைக் கண்டுபிடித் தது எங்கள் தாத்தா,மின்சாரத்தைக் கண்டுபிடித் தவர்கள் எங்கள் மூதாதையர் என்றிருந்தால் அதன் அருமை தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பைப் பார்க்கா மல், கேலி, கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல், மூளை குழம்புமே, கண்