பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

நல்லார் செயும் கேண்மை நான்தோறும் நன்று ஆகும்;
அல்லார் செயும் கேண்மை ஆகாதே;—நல்லாய்! கேள்:
காய் முற்றின், தின் தீம் கனி ஆம்; இளந் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்?38

கற்று அறியார் செய்யும் கடு நட்பும், தாம் கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே—பொற்றொடீஇ!—
சென்று படர்ந்த செழுங் கொடி மென்பூ மலர்ந்த
அன்றே மணம் உடையது ஆம்.39

பொன் அணியும் வேந்தர், புனையாப் பெருங் கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார்; பின்னும் அணி
பூணும் பிற உறுப்பு,—பொன்னே!—அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ? காண்!40