பக்கம்:நூறாசிரியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

200

ஏரி: ஏருக்குப் பயன்படும் நீர் தேங்கியிருக்கும் நிலை

இரிதல்: இடிந்து விழுதல், முரிதல், இணைவு அறுதல்

பாய்கால் : நீர் பாய்ந்தோடும் வாய்க்கால். ஆய்வழி ஏதோ ஒரு வகையான் ஆகிவரும் வழி.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம்

- என்னும் குறட்பாவை நினைவு படுத்தியது இக்கருத்து.

சாய்வழி : ஒரேயடியாகப் போகும் வழி.

இவ்விடத்துக்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

- என்னும் குறட்பாவை ஓர்க,

வாய்க்கால் வெட்டி விடாமைப்பொழுது, ஏரி நீர் கரையுடைத்து அண்டை அயல் ஊர்களுக்கு அழிவை உண்டாக்குதல் போல், அறவழியில் செலவு செய்யப் பெறாமல் தேங்கியுள்ள பெருஞ்செல்வம் வேறு வழியிற் கழிந்து குற்றங்களையும் தீங்குகளையும் உண்டாக்கும் என்க.

இங்கு,

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

- என்னும் மெய்ம்மொழியை நினைக்க

செல்வம் தேங்குதல் அரிது. ஏதோ ஒரு வகையான் தேங்கி நிற்பின் அது நல்வழிக்குச் செலவிடப் பெறுதல் வேண்டும். அல்லாத வழி, அஃது

அவ்வழியில் சென்று அது குற்றங்களையும் கொடுமைகளையும் விளைவிக்குமாம் என்க.

- இது, காஞ்சிப் பொதுவியல் எண் திணையும் முது காஞ்சி என் துறையுமாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/226&oldid=1209030" இலிருந்து மீள்விக்கப்பட்டது