பக்கம்:நூறாசிரியம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56 கொதிப்புறு நறுநெய்


எவர்கொல் அவர்க்கே முனிவாற் றும்மே!
அரைசாள் இழிசின் புரைசூழ் நெஞ்சினன்;
பறைவாய் தெறிக்கும் பத்த வச்சலன்
பெயரா விருக்கை நினைவிற் றப்பி
வடவர்ப் பணியும் முடவெள் ளறிவின் 5
இட்ட போக்கிற் கிடறாக் காவலர்
சுட்டுக் கிடத்திய செந்தமிழ்ச் சிறாஅன்
வளங்கூர் நாவின் இளங்கோ
மருந்தகத் துளைந்துயிர் துறப்பப் புடைந்து
கற்பத் தூக்கிய சுவடி வீசி 10
வெற்புத்தோளில் விறலேற்றித்
தெறுவிழியில் தியேற்றிச்
செந்நாவிற் செற்றத்தார்
உண்ணாவி அறக்கழல
ஒருசூலிற் பன்னுாறாப் 15
புற்றீயற் புறப்பாட்டின்
கதிர்கொன்ற களமென்ன
எதிர்நின்ற மரம்வீழ்த்தி
ஒச்சுமுகத் தடக்கையின்
காச்சிதர்க்கும் களிறன்ன 20
மலையெரிவாய் பீர்ந்தன்ன
உலைநெஞ்சின் வெளியேறிப்
புதுப்புனலின் கதழ்போகிக்
கொதிப்புறு நறுநெய் யாக
விதிர்ப்புறப் படைப்புல மெதிர்ந்த ஞான்றே! 25

பொழிப்பு :

எவர்தாம் அவர்களுக்கு எழுந்து நிற்கும் கடுஞ்சினத்தை ஆற்றக்கூடியவர்; அரசு ஆள்கின்ற இழிமையும் சிறுமையும் கொண்டு, தவறான நடவடிக்கைகளையே ஆராய்கின்ற உள்ளத்தினனும், பறைபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/285&oldid=1221143" இலிருந்து மீள்விக்கப்பட்டது