பக்கம்:நூறாசிரியம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

நூறாசிரியம்

'இவனியார் என்குவீராயினிவனே..கொலைகோற் காவலர் குறிகொள் எஃகும் அதிரப் படர்ந்தாராக, எதிர்தலைப்பட்ட எம் மாண் மகனே’- என்றும்.

‘தாறலைப் பாகர் தந்துயர் பொறாஅது ஊறுதக நினைக்கும் உயவல் யானை, கையுகத் தறைந்து கால்தலை நெறிக்கும் மெய்யே போலும்-நூறப் புக்க’ என்றும்

கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுக.

இப்பாடல் முன்னைய பாடலின் தொடர்ச்சி.

காலமும் சூழலும் முந்தைய பாடல்களுள் கண்டுகொள்க.

இவனியார் என்குவீர் ஆயின் (இதோ இங்கு இறந்த கிடக்கும்) இவன் யார் என்று வினவுவீர் ஆயின்.

தாறு அலை பாகர் தம் துயர் பொறாது- தாறு (கோட்டி - அங்குசம்) கொண்டு, குத்தித் துன்புறுத்தும் யானைப் பாகரின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளாமல்.

ஊறுதக நினைக்கும் உயவல் யானை - தம்மைத் துன்புறுத்தியவர்க்குத் தானும் துன்பம் செய்ய மிகுதியும் நினைக்கின்ற மதங்கொண்ட யானை.

கை உகத்து அறைந்து - தன் தும்பிக்கையை உயரத்து தூக்கித் (தன் மேலே ஏறியிருந்த பாகனைப் பற்றியெடுத்துத் தரையில் வீசி) அறைந்து.

கால் தலை தெறிக்கும் - காலால் தலையை நசுக்கிச் சிதைக்கும்.

மெய்யே போலும் - உண்மையான நடைமுறை போல.

பொய்சேர் கொற்றம் - பொய்யைக் கூறும் பொய்யர்களையே சேர்ந்திருக்கும் இவ் வரசு

பொய்யைக் கூறுவது, இந்தி படித்தால் நன்மை வரும், ஒருமை வளரும், வேலை கிடைக்கும் ‘ என்றவாறு என்க.

வழங்குமொழி உவப்ப - வழக்கில் உள்ள தமிழ் மொழியைக் குழப்பிச் சீரழிக்க

இலங்கில் வறு மொழி பாரிப்பு - சிறப்பில்லாத விளக்கமில்லாத வறிய எளிய மொழியாகிய இந்திய மொழியை வளர்த்துப் பரப்புவதை

உடன்று- (மாறுபட்டு) எதிர்த்துப் போராடி

நூறப்புக்க- அழித்தற்கு (மாணவர்கள்) முயற்சி செய்ய,

கொலை கோல் காவலர்- கொலைகளைச் செய்யும் கோல்களை உடைய காவலர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/290&oldid=1221153" இலிருந்து மீள்விக்கப்பட்டது