பக்கம்:நூறாசிரியம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

296

உடையவள். தன் இனமாகிய தமிழினத்தை அழித்து வரும் வீணான ஆட்சியைச் செய்தவனாகிய இராசீவுக்கு எதிராக, வெகுண்டெழுந்த (வெப்பம் மிகுந்த பழிவாங்கத்தக்க) கடுஞ்சினம் தன் நெஞ்சத்திலும், உயிரிலும் (கலந்து) நிலைத்துவிட்ட மாறாத எண்ணத்தொடு, தான் ஒருத்தியே தனித்து நின்றாளாகி, ஊர்மக்களுக்கு நடுவில் அவனைச் சிதைத் தழித்துத் தன்னையும் இழந்து நின்ற ஈகமன்றோ (மற்ற எல்லா நிலையிலும் பிறர் செய்த ஈகங்களை விடச் சிறந்த) ஈகமாகும்! இவ்வகையில் அவள் பெற்ற அழிவிலாத புகழ்க்கு இவ்வுலகமே ஈடு ஆகுமோ? (ஆகாது என்க.)

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. தமிழீழத்தில் நிகழ்ந்து வருகின்ற விடுதலைப் போராட்டக் காலத்து இடையில் நிகழ்ந்த, இந்தியாவின் தலைமையமைச்சராகவிருந்த இராசீவ் என்ற இந்திராவின் மகனும், சவகர்லால் நேருவின் பெயரனும், இலங்கைத் தமிழர்களினின்று தோன்றி, இராசீவ் இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை என்ற தமிழின அழிவுப் படையால் தாக்குண்ட தானு என்ற ஒர் இளம் பெண் தன் உடலிற் பிணித்த வெடிகுண்டுடன் நெருங்கி மோதி அழிக்கவும் அழியவும் பட்ட அளவிடற்கரிய ஈகச் சாவைப் போற்றிப் புகழ்ந்து கூறியதாகும் இப்பாடல்.

தானு என்னும் பெயரினள், தன்னினம் அழித்த வீணனாகிய இராசீவுக்கு எதிராக வெகுண்டு எழுந்து, இலங்கையினின்று தமிழகம் போந்து, தனி ஒருத்தியாக, ஊர்மக்கள் நடுவில் நின்று வெடிகுண்டு பிணித்த உடம்புடன் அவனை மோதியழித்தலால், தானும் தன் இன்னிளவுயிர் நீத்துக் கொண்ட ஈகமறம், வேறெந்த ஈகத்தினும் தனிச்சிறப்பும் பெருமையும் கொண்டது ஆகலின் அது அழிவிலாப் புகழ் பெற்றது என்க.

இப்பாட்டு நான்கு வேறான செயற்படி நிலைகளைக் கொண்டது. ஆனாலும் நான்கு செயல்களும் படிப்படியே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது.

முதலது, தமிழீழத்தில் இனத்தாக்கம் நேர்ந்து, சிங்கள இனத்தாலும், இராசீவ் இந்தியாவினின்று அமைதிப்படை என்னும் பெயரால் அனுப்பி வைத்த அழிம்புப் படையாலும் தாக்கமுற்ற தமிழீழத் தமிழர், அது பொறாது, தங்களின் மானத்தையும் உயிரையும் வாழ்வையும் காத்துக்கொள்ள வேண்டி, வானூர்தி வழி வானையும், இயங்கிகள் வழி நிலத்தையும், கப்பல் வழிக்கடலையும் கடந்து வெளிநாடுகளுக்கு ஏகியதும்,

இரண்டது, அவ்வாறு வெளிநாடு ஏகுவதற்கியலாத தமிழ மக்கள், அங்குள்ள கானகங்களில் புகுந்து ஒளிந்து வாழ்தலும், இளவோராக உள்ள பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் விடுதலைப் போராளிகளுடன் போராட்டக் களத்தில் விரும்பியோ விரும்பாமலோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/322&oldid=1221400" இலிருந்து மீள்விக்கப்பட்டது