பக்கம்:நூறாசிரியம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

345


அடைவாய் வாய் அடை என மாறிக்கூட்டி வாயின்கட் பொருந்திய எனப் பொருள் கொள்ளப்பட்டது.

எஃகம் இரும்பினான் ஆகிய கடிவாளம். வலி இழுத்தல்.

கடை புடைப்பினும் நடைமாறாதாய் - கடைவாய் வீங்கப் பெறினும் செலவு மாறாதோய்!

கடை கடைவாய், புடைத்தல்- வீங்குதல் நடை செலவு 'கதி’.

மாறாதாய்- மாற்றமில்லாதோய் குதிரையை முன்னிலைப்படுத்தி இவ்வாறு கூறினான்.

ஈண்டு கடுகல் - இவ்வாறு விரைந்து செல்வதற்குக் கரணியம் என்னை?

மேல், 'நினைதியோ’ என்பது நோக்கி ஈண்டு என்னை என்பது வருவித்துரைக்கப்பட்டது.

குவித்த அறுகொடு - குவித்த அறுகம்புல்லொடும்.

குவித்த என்றமையால் புல்லின் மிகுதி கூறப்பட்டது.

மென்புகை மணக்க அவியல் காணம் - மெல்லிய ஆவியின் மணங் கமழ வேகவைக்கப்பட்ட கொள்ளு.

புகை என்றது புகைபோலும் ஆவியை காணம் கொள்ளுப் பயறு.

நினைதியோ - நீ நினைக்கின்றனையோ, நீ - என்பது தோன்றா எழுவாய்.

கடிவாளத்தை இழுத்துப்பிடிப்பினும் நடைமாறாமல் விரைவதற்குக் கரணியம் இந்நினைவுதானோ என்றனன்.

திதலைப் பொன்பொறி சுருக்கத்து ஒடுங்கும் -தேமலாகிய பொன்னிறமான புள்ளிகள், வயிற்றுச் சுருக்கத்தின் கண்மறைகின்ற.

திதலை-தேமல், பொன்பொறி. பொன்னிறப் புள்ளி,

சுருக்கம் தோற் சுருக்கம் தோலின் மடிப்பு.

புதவல் பயந்த -ஆண்மகவை ஈன்ற

புனிறு இள வயிறோள் - ஈன்றணிமையுடைய மென்மையான வயிற்றையுடையவள்.

புனிறு- ஈன்றணிமை அது பதினாறுநாள் வரை என்பது உலக வழக்கு மகப் பெற்ற மகளிர்க்குப் பதினாறு நாள் காறும் உடல் வலிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/371&oldid=1209387" இலிருந்து மீள்விக்கப்பட்டது