பக்கம்:நூறாசிரியம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

363


ஏழையர்க்கு உதவிய எளிமை வாழ்வினன் - ஏழைமக்கள் முன்னேற அவர்கட்கு உதவிபுரிந்த எளிமையான வாழ்வினன்.

ஊழையும் உப்பக்கம் ஓட்டிய திறலோன் - ஊழ்வினையையும் புறங்காட்டி யோடச் செய்த ஆற்றலாளன்.

ஊழ்வினையின் பெயரால் காலங்காலமாக மேல்சாதியார்க்கு அடிமைகளாகவும், கல்வியறிவும் பதவி நலமும் அறியாதவராகவும், தலைமுறை தலைமுறையாக வரும் எளிய தொழில்களை வருந்திச் செய்தும் இன்னலுற்ற ஏழைஎளிய மக்கள் கல்வியறிவு பெற்றும் வேலைவாய்ப்புகள் பெற்றும் முன்னைத் தலைகளை முறித்தெறிந்து முன்னேறுதற்கான அடிப்படையாக, இராசாசி தொழிற்கல்வி என்னும் பெயரில் குலக்கல்வித் திட்டத்தைச் சூழ்ச்சியாகக் கொண்டு வந்த போது திட்டமிட்டு அதனை முறித்து வெற்றி கண்டமையின் ஊழையும் உப்பக்கம் ஒட்டிய திறலோன் என்றார்.

இலவயக் கல்வி எங்கும் நிறுவிய வலவன் - இலவயக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்து அதனை செயற்படுத்திய திறமையாளன்.

நெஞ்சே இவனை வாழ்த்துக - நெஞ்சே இவனை வாழ்த்துக,

இப்பாடல் பாடாண்திணை எனும் புறத்தினையும் இயன்மொழி எனும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/389&oldid=1209673" இலிருந்து மீள்விக்கப்பட்டது