பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 & நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் கொடுத்துத் தலைமை நிலையம் உதவுகிறது. தலைமை நிலையத் தில் 100-க்கும் அதிகமான முழுநேர அலுவலர்கள் வேலை பார்க்கிரு.ர்கள். தலைமை நிலையத்தில் தலைமை அதிகாரி நிருவாக இயக்குநர் ஆவார். அவரின் கீழ் இணை நிருவாக இயக்குநர் ஒருவரும் துணை நிருவாக இயக்குநர்கள் இரு வரும் பணியாற்றுகிரு.ர்கள். கழகத்தின் நிருவாகக் குழுவுக்கும். கழக அலுவலர் களுக்குமிடையே தொடர்பாளராக நிருவாக இயக்குநர் பணியாற்றுகிரு.ர். வெளிநாட்டுப் பிரமுகர்களேயும், நூலக வியல் அறிஞர்களையும் வரவேற்றுச் சிறப்பிப்பதும் இவரது பொறுப்பாகும். டி லகச் சட்டங்கள் பற்றி ஆலோசனைகள் கூறுவதற்காக வாசிங்டனிலுள்ள சட்டக் குழுவுடன் இவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிரு.ர். வெளிநாடுகளில் கழகம் மேற்கொண்டுள்ள நூலகத் திட்டப்பணிகளை மேற் பார்வையிடுவதும் நிருவாக இயக்குநரின் பொறுப்பாகும். கொள்கைகளை வகுப்பதிலும், திருவாகத்தைக் கவனிப்பதி லும் இவருக்கு உத வுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில், இன துனே திரு . இயக்குநர்களும், நூல் வெளியீட்டுப் பிரிவின் இயக்கு நரும் உறுப்பினர்களாக உள்ளனர். தகவல் நிலையம் நூலகத் துறை தொடர்பான தகவல் நிலையமாகவும் ( information Bureаи) &&оо»ш நிலையம் இயங்கிவருகிறது. நூலக நிருவாகம் பற்றித் தகவல்கள் கேட்டு இங்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் நூலகங்களிலிருந்து வருகின்றன. ஆண்டுதோறும் அலுவல ர் தேர்வுபற்றி மட் டும் இலட்சத்திற்கும் அதிகமான தகவல்கள் அனுப்பப்படு கின்றன. பொது உறவுத் தொடர்பு குறித்து 30,000 கடிதங் களும், நூலக நண்பர்கள் பற்றி 25,000 கடிதங்களும் எழுதப்படுகின்றன.