உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு நூலகங்கள் I () 7

பானவர்களுக்குத் தக்க தருணத்தில் வழங்கும் கலையிலும், குறிப்பிட்ட நிறுவனம் அல்லது வாடிக்கைக்காரரின் தேவைக்கு ஏற்ற தகவல்களை அறிவதற்கான ஆதாரங். களேக் கண்டு பிடிப்பதிலும் வல்லமை பெற்று விளங்கும் சிறப்பு நூலகர்கள் செய்துவரும் தொண்டு சொல்லுக்கு அடங்காத ஒன்று. நூலகமல்லாத நிறுவனம் ஒன்றின் சேவைப் பிரிவு களில் ஒன்ருகச் சிறப்பு நூலகம் வழக்கமாக அமைக்கப்படு கிறது. அந்த நிறுவனத்தின் செயல் முறைகளையும் நோக் கங்களையும் சிறப்பு நூலகர் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ற நூல்களே வாங்கிச் சேகரிக்கவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இணங்க நற்பணி புரியவும் அவரால் இயலும். அவர் பொறுப்பேற்றிருக்கும் சிறப்புத் துறையைப் பற்றி யும் அதன் பொருள்கள் குறித்தும் சிறப்பு நூலகர் ஒரளவு அறிந்திருக்கவேண்டும். அது மட்டுமின்றி. அந்தத் துறைக் கும் பொருளுக்கும் பொருத்தமான நூலக நுட்பங்களைக் கையாளும் திறமையும் அவருக்கு அமைந்திருக்கவேண்டும். கிடைத்தற்கரிய தகவல்களை எங்கிருந்து பெறலாம் என்ற துட்பத்தை அறியும் சிறப்பான ஆற்றல் சிறப்பு நூலகரின் வெற்றிக்குப் பெருந்துணை செய்யும். தகவல் கிடைக்கும் இடத்தை அறிவதோடன்றி. அதைப் பெறுவது எத்துணை கடினமானதாக இருப்பினும் சிறிதும் மனம் சோர்வடை யாமல் உள்ள உறுதியோடு முனைந்து நின்று, இடையூறுகளை முறியடித்து, தடங்கல்களைத் தாண்டி தான் விரும்பிய தகவலைச் சேகரிக்கும் தனித்திறமையும், தளரா முயற்சியும் அவருக்குத் தேவை. விரும்பிய தகவல் ஒரு நூலில் இருக் கலாம்: அல்லது துண்டு வெளியிட்டில், நாளிதழில், அரசாங்கச் சான்றிதழில், பரிசோதனைச்சாலை அறிக்கை யில், ஒரு நிறுவனத்தின் அச்சடிக்கப்படாத ஏட்டில் அத் தகவல் இருக்கலாம். முதலில் அத்தகவல் எதிலிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது நூலகர் கடமை. பிறகு, அந்த