பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் பொதுமக்களும் சில சமயங்களில் இந்நூலகத்தை நாடுவ துண்டு. கலையழகும் நுட்பமும் வாய்ந்த அரிய பொருள் கள் பொருட்காட்சியில் இடம் பெறுவதால், இவற்றினைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் கலைக் கண்ளுேட்டமும் பொருட் காட்சி நூலகருக்கு அவசியம் இருக்க வேண்டியனவாகும். அமெரிக்காவில் தற்பொழுது நுண்கலைகள் பற்றிய நூல்களையும், அரிய நூல்களையும் கொண்ட சிறப்பு நூலகங் களின் எண்ணிக்கை படிப்படியாகப் பெருகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற நுண்கலைச் சிறப்பு நூலகங்கள் சில அமெரிக்காவில் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ஹட்டிங்டன் கலைக்கூட நூலகம், நியுயார்க்கிலுள்ள கலைப் பொருட்காட்சி.மார் கான் நூலகம். வாசிங்டனிலுள்ள தேசியக் கலைக்கூடம் ஆகியவை குறிப்பிடத் தக்கன. நுண்கலை நூலகங்கள் இப்பொழுது படிப்படியாகப் பொது மக்களிடையே செல்வாக்குப் பெற்று வருகின்றன. அண்மையில் ஜெர்ஸி நகரில் ஒரு துண்கலே நூலகம் திறக்கப் பட்டது. இது இம்மாகாணத்திலேயே முத லாவது நுண்கல நூலகமாகும். 3,50 000 டாலர் செல வில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சொந்தக் கட்டிடத்தில் இந்நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது பெரிய நகரங்களில் இசை-நாடக அரங்கு நூலகங்களும் இயங்கி வருகின்றன. இசைப் பள்ளிகளில் சிறப்பு நூலகங்கள் நிறுவப்பட் டுள்ளன. பல பெரிய பொது நூலகங்களில் இசைப் பிரிவு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இசைவாணர்கள், இசை யமைப்பாளர்கள். நாட்டியக்காரர்கள், நடிகர்கள், நடிகை கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் பணியாற்றுவது நூலகர்களுக்கு உளம் மகிழும் அனுபவமாக அமைகிறது. வரலாற்றுப் பொருட்காட்சிகளிலுள்ள நூலகங்களும் சிறப்பு நூலகவரிசையில் சேரும். நாடெங்கிலும் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான வரலாற்றுக் கழகங்கள், சிறிய அல்லது பெரிய நூலகங்களை நடத்தி வருகின்றன. மாகா ணந்தோறும் குறைந்தது ஒரு வரலாற்று நூலகமாவது