உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 8 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் பணிக் குழுவில் 9 உறுப்பினர்கள் இடம் பெற்ருர்கள். இவர்கள் அனைவரையும் பிராட்டே தேர்ந்தெடுத்தார். இனிமேல், குழுவில் காலியிடம் ஏற்பட்டால் அதற்குக் குழுவே உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாமென பிராட் விதி வகுத்தார். சமயம், அரசியல், இனம், நிறம், காரணமாக அறப் பணிக் குழு உறுப்பினர் அல்லது நூலக அதிகாரி எவரையும் வேலையிலிருந்து நீக்கவோ அல்லது வேலையில் நியமிக்கவோ கூடாது' என்பது பிராட் வகுத்த திட்டவட்டமான விதிமுறைகளில் ஒன்று. நூலகத்தை நகர மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா 1886 சனவரி 4-இல் நடந்தது. இவ்விழாவில் உரையாற்றிய பிராட் சுருக்கமாகச் சில வார்த்தைகளே கூறினர். எனி லும், அந்தச் சொற்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக் கப்பட வேண்டியவை. பிராட் சொன்னர்: "ஆண்டவனின் ஆசியுடன் இன்று இந்நூலகத்தை உங்களிடம் ஒப்படைக் கிறேன். இதைப் பேணிக்காத்து, மென்மேலும் வளர்த்து, இன்றைய மக்களும் வாழையடி வாழையாக இனிவரும் சந்ததியினரும் இதன் பலன்களைத் துய்த்து இன் புற்றிருப்பார்கள் என நம்புகிறேன். முடிந்து விட்டது என் பணி. நிறைந்து விட்டது என் நெஞ்சம்.' நூலகக் கட்டிடங்களுக்கான மனைகள் வாங்கவும், கட் டிடங்களேக் கட்டவும், அறநிதிக்கு நிதி ஒதுக்கவும் பிராட் மொத்தம் செலவிட்ட தொகை 11:45,833 டாலர். நூல கத்தின் மூலதனத்தில் ஆண்டுதோறும் 5 சதவிகிதம் வரு மானம் கிடைக்கும் வகையில் நூலகத்தின் நிதித் திட்டங் களேப் பிராட் வகுத் திருந்தார். இதன்படி ஆண்டுதோறும் 50,000 டாலர் வருமானம் கிடைத்து வந்தது. இந்த வரு மானத்தைக் கொண்டு மேலும் இரண்டு கிளைகள் திறக்கப் படடன. நூலகத்தை நகருக்கு அர்ப்பணித்ததுடன் அதனு: டைய தொடர்பை பிராட் அறுத்துக்கொண்டு விடவில்லை.