உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 20 I இந்தியப் பல்கலைக் கழக நூலகங்களில் அரசாங்க ஆவணங் களேச் (Documents) சேகரிட்பது மிகக் குறைவாகவே நடை பெறுகிறது எனலாம். இது ஒரு பெருங்குறையே இந்த நூலகங்களில், மாநில, மத்திய அரசுகளின் ஆவணங்களேச் சேகரித்து வைப்பதற்கு விரிவான ஏற்பாடுகளும் வசதி களும் உடனடியாகச் செய்தல் வேண்டும். இதற்காக அர சாங்கங்களுக்கு ஆகும் செலவு மிகவும் சொற்பம். ஆனல், இதஞல் தாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கும் அறிஞர் களுக்கும் உண்டாகும் நன்மைகள் அளப்பரியன. நமது பல்கலேக் கழக நூலகங்களின் பல பழைய நூல் கள் கிடைப் பதில்லை. இந்தக் குறையை நீக்குவதற்கு நூல் களே நுண்கருள்களிலும் (Microfilms), நுண் அச்சுக்களிலும் (Microprints) படியெடுத்து வைத்துக் கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். இக்காலத்தில் ஆராய்ச்சிக்கு முக்கிய மாகப் பயன் படுபவை நாளிதழ்கள், இவற்றைப் பத்திர மாகப் பாதுகாத்து வைப்பது எளிதான காரியமன் று. எனவே, இவற்றையும் நுண்சுரு ள்களிலும் நுண் அச்சுக் களிலும் படியெடுத்து வைத்துக் கொள்ளலாம். இது மிக வும் சிக்கனமான முறைகளில் ஒன்று. நூல்கள், நாளிதழ்கள் முதலியனவற்றைப் புகைப்படப் படிகள் எடுப்பதற்கும் நமது பல்கலைக்கழக நூலகங்களில் வசதிகள் செய்யவேண்டும். சென்னைப் பல்கலைக் கழகம், டெல்லிப் பல்கலைக் கழகம் போன்ற ஒரு சில பல்கலைக் கழக நூலகங்களில் இன்று இவ்வசதி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒல்வொரு நூலகத்திலும் உடனடியாக இவ் வசதியை ஏற்படுத்துவது இயலாது. ஆகையால் படிப்படி யாக எல்லா நூலகங்களிலும் இவ்வசதியை ஏற்படுத்து வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். 2. பயிற்சி பெற்ற ஊழியர்கள் நூலகப் பணிகளைப் பொறுத்தவரையில், அமெரிக்கா வுடன் ஒப்பிடும்பொழுது இந்திய நூலகங்கள் எவ்வளவோ