பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. I 0 அாாக தாட்டில் காற்றிருபது நாட்கள் கையாளலாம். ஆய்வு உதவிப் பளியும், ஆலோசனைப் பளியும் தாலகப் பணியின் இரு அடிப்படை அம்சங்களா கும். நூலகத்தைச் சமுதாய மக்களுடன் இன்னப்பதற்கு இவ்விரு பணிகளும் உதவுகின்றன. இங்வழி வகைகளை எல்லாம் நாமும் கடைப்பிடிப்போமாளுல் தம் நாட்டு நூலகங்களும் சிறந்த பணிகளைச் செய்ய இயலும். பல துறைகளிலும் வழிகாட்டியாக விளங்கும் தமிழ் தாடு பொது நூலகத் துறையிலும் வழிகாட்டியாக விளங்கு வது நாமறிந்த தொன்றே. சென்னை மாநிலப் பொது நூலகச் சட்டம் 1948-இல் கொண்டு வரப்பட்டது: 1950-இல் நடை முறைக்கு வந்தது. பதினேழு ஆண்டு களில் பொது நூலகத் துறை குறிப்பிடத் தக்க அளவிற்கு, தாம் அனைவரும் போற்றும் நிலையில் வளர்ச்சி பெற்றுள்ள மையை யாரும் மறுக்க இயலாது. இன்று நூலக ஆணைக் குழுவினரால் நடத்தப் பெறும் பொது நூலகங்கள், தலைமை நூலகங்கள், கிளை நூலகங்கள், வழங்கு நூலகங்கள் ஆகப் பல்கிப் பெருகி உள்ளன. அதாவது பல பொது நூலகங்கள் பல ஊர்களில் விரைந்து தொடங்கப் பெற்றன. இனியும் பல நூலகங்கள் திறக்கப்பட விருக்கின்றன. ஆளுல் ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த அளவில் நூலகங் களைத் திறப்பதை நிறுத்தி விட்டு, திறக்கப்பட்ட நூலகங் கள் எந்நிலையில் செயலாற்றுகின்றன? மக்களுக்கு அவை எந்நிலையில் துணை செய்கின்றன? திட்டத்தில் குறைபாடு கள் ஏதேனும் உளவா? குறைபாடுகளிருப்பின் அவற்றைக் களைவதற்குரிய வழிவகைகள் என்ன? எல்லா மாவட்டங் களுக்கும் நிதி நிலைமை சரியாக உள்ளதா? இல்லாதிருப் பின் என்ன செய்ய வேண்டும்? திறக்கப்பட்ட நாலகங்கள் திறம்படச் செயலாற்ற மேலும் என்ன செய்யவேண்டும்? என்பனவற்றை எல்லாம் தமது அரசாங்கம் ஆராய்ந்து, பொது நூலகங்கள் திறம்படச் செயலாற்றி, சமுதாயத் தின் இன்றியமையாத அங்கங்களில் ஒன்ருக மாறுதற்கு தல்லதொரு திட்டமொன்றிகள வகுத்த பின்னரே, மேம்