உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அளவு அளவிடற் கரியதாகும். தன் தப்பியது! சிகாகோவிலிருக்கின்ற பொழுது ஒருநாள் மாலை நெய் பாவி ஊர்தி விபத்துக்காளாக விருந்த ஒர் அமெரிக்க மூதாட்டியைக் காப்பற்ற நான் முயல்கையில் விபத்துக்கு ஆளாக நேர்ந்தது. ஆனால், இறைவனருளால் பலத்த அடி யோடு உயிர்தப்பினேன். கையில் அடிபட்ட காரணத்தால், கை முழுவதும் வீங்கவே, அமெரிக்க நூலகக் கழக வெளி நாட்டுத்தொடர்புத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றும் டாக்டர். ஆஷம் (Asheim) அவர்கள் ஒரு பெரிய விருந் துக்கு ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்தபோதிலும் உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார்கள். அத்துடனில்லாது, விருந்து முடிந்ததும் நள்ளிரவு என்றுகூடப் பாராது மருத்துவ மனைக்கு வந்து ஆறுதல் கூறி இரவு முழுவதும் என்னோடு இருந்தார்கள். அங்கு மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனிக்கின்ற முறை பாராட்டுதற்குரியதாகும். நான் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறத்தாழ 4 மருத்துவர்கள் தனித்தனியே வந்து பார்வையிட்டுப் பின் னர் அவர்களுக்குள் கலந்தாலோசித்துச் சிகிச்சையைத் தொடங்கினர்கள். நான்கு முறை ஒரே இடத்தை எச்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். நான் 10 டாலர் கொடுத்து மருத்துவ இன்சூரன்ஸ் செய்திருந்ததால், எல்லாச் சிகிச்சை களும் இலவசமாகவே நடைபெற்றன. இச் சிறுவிபத்தின் காரணமாகக் கையில் கட்டுப்போட்டிருந்த காரணத்தால், உடை உடுப்பதற்கும், உணவு உண்பதற்கும் சிலவேளைகளில் சிரமப்பட்டதுண்டு. அச்சமயங்களில் ஜப்பான் நண்பர் யூச்சி மொளுக்காவும், திருமதி. ராபர்ட்சனும், திரு. ரீவத் சவாவும் உடனிருந்து உதவிகள் பல புரிந்தனர். நான் முழு நலமடையும்வரை என் நலனில் டாக்டர். ஆஷம்