பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொன் விளையும் பூமி அமெரிக்க நாடு செல்வம் கொழிக்கும் சீமை என்பதை நாமனைவரும் அறிவோம். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, மக்கள் சலியாது உழைப்பதாகும்: மற்ருென்று அந்நாடு பொன் விளையும் பூமியைக் கொண் டிருப்பதாகும். நான் அமெரிக்காவில் தங்கியிருக்குங்கால், பல நாட்களை, பொன் விளையும் பூமியாகிய கலிபோர்னியா மாநிலத்திலேயே கழிக்க நேர்ந்தது. எனவே அம்மாநிலம் பற்றிய பொதுவான செய்திகளை இங்கு கூறுதல் பொருத்த முடைத்தே. எல்லா மாநிலங்களும் பெரும்பான்மையாக இவ்வடிப்படையில்தான் விளங்குகின்றன. எனவே, இம். மாநிலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல், ஒரளவுக்கு அமெரிக்க நாட்டின் அமைப்பைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளுதலே ஆகும். அமெரிக்காவில் மூன்ருவது மிகப்பெரிய மாநிலமாகத் திகழ்வது கலிபோர்னியா மாநிலம். ரபப்பளவில் மூன்ருவ: தாக இருந்தாலும், மக்கள் தொகையில் இம்மாநிலம்தான் நாட்டில் மிகப்பெரியது. பசிபிக் கடலின் ஒரத்தில் 1000 மைல் நெடுகிலும் இம்மாநிலம் பரந்திருக்கிறது. தெற்கில் மெக்சிகோ முதல் வடக்கில் ஆரிகோன் வரையிலும் இந்த மாநிலத்தின் எல்லை நீண்டிருக்கிறது. கிழக்குக் கலிபோர்னி யாவில் இன்யோ (Inyo) கவுண்டியில் பானமிண்டு (Panam