பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உழைப்பால் உயர்ந்த மக்கள் _ 2-லகத்திலுள்ள பிற நாட்டு மக்களைப்போலன்றி, அமெரிக்க மக்கள், தாங்கள் வாழும் நாட்டின் ஆதிக்குடிகள் அல்லர். அமெரிக்கரின் பண்பிலுள்ள பல அம்சங்களுக்கு இது அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது. பெயர் பெற்ற அமெரிக்க வரலாற்றறிஞர் டேவிட் போட்டர் (Davi Patter) இதைத் தெளிவாகப் பின்வருமாறு விளக்கு கிருர்: “உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தொல் குடிமரபு (Ethnic root) என்று ஒன்று உண்டு. காலிக் (Gallic) என்ற ஆதி மரபைச் சேர்ந்தவர்கள் பிரெஞ்சுக் காரர்கள். டியூடோனிக் (Teutonic) மர பின் வழி வந்த வர்கள் செர்மானியர்கள்: ஆங்கிலேயர்களோ ஆங்கிலோசாக்சன் என்ற தொன்மை மரபைச் சேர்ந்தவர்கள். உரோமன் மரபு இத்தாலியர்களுடையது. ஐரிசு மக்கள் செல்டிக் (Celtic) இனத்தைச் சேர்ந்தவர்கள். இதைப் போன்று தங்களின் ஆதி இனம் என்று சொல்விக் கொள் வதற்கு அமெரிக்க மக்களுக்கு ஒர் இனம் ஏதும் கிடை யாது. அமெரிக்காவின் ஆதிவாசிகள் என்று சிவப் பிந்தி யர்களே (Red Indians) ஒரளவுக்குச் சொல்லலாம். மற்ற அமெரிக்கர்கள், இந்நாட்டில் ஆதியிலிருந்து வாழ்பவர்கள் அல்லர்: பாதியில் இங்கு வந்து குடியேறியவர்கள்'.