உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் எந்தத் துறையிலும், உலகில் அமெரிக்காவே முன்னணி யில் இருக்கவேண்டும் என்று அந்நாட்டு மக்கள் விரும்பு கிருர்கள். எனவே, அவர்கள் தங்கள் அறிவாற்றலை மேன் மேலும் வளர்த்துக்கொள்ள முயல்கிருர்கள். அதற்குப் பொது நூலகங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் வதே சிறந்த வழி என அவர்கள் கருதுகிருர்கள். எனவே, அறிவாற்றல் மிக்க குடிமக்களை உருவாக்கி அவர்களின் சொந்த வாழ்க்கையை வளப்படுத்தும் ஒர் இன்றியமை யாத சாதனமாக இன்று அமெரிக்க நூலகம் திகழ்கிறது. இன்றையச் சமுதாயத்திற்கு எவை எவை முக்கியமான வையோ அவையெல்லாம் நூலகத்திற்கும் முக்கியமாகி விட்டன. மக்களே முக்கியம்: நூல்கள் அன்று' என்ற கருத்து, தற்கால நூலக இயக்கச் சிந்தனையோட்டத்தின் முதுகெலும் பாகிவிட்டது. இந்தக் கருத்து மாற்றம், சில நூலகங்களில் திடீரெனத் தோன்றியிருப்பதைக் காண முடி கிறது. புதிய கட்டிடம், சுறுசுறுப்பான நூலகர், மக்களின் எழுச்சி-இம்மூன்றில் ஏதாவது ஒன்றினல், அல்லது மூன்றின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும். மற்ற நூலகங்களில் படிப்படி யாக மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆளுல், நூல கங்கள் எந்த வகைப்பட்டதாக இருப்பினும், அவை எங்கி ருந்தாலும், மக்களின் அன்ருடத் தேவைகளை நிறைவு செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு முனைந்திருப் பதைக் காணமுடிகிறது. அதேசமயத்தில், எதிர்காலத்தை யும், வருங்காலத்தில் வரவிருக்கும் மகத்தான வாய்ப்புக் களையும் கருத்தில் கொள்ளவும் அவை தவறவில்லை. அமெரிக்காவில் நான்கு வகையான நூலக அமைப்புக் Vieir (Library Systems) a_airasraor. 97606.justelaur: 1. Lorrsbäff sorous ongololi Li (Metropolitan Library System) நகராட்சி மன்றங்கள் அல்லது மாநக ராட்சி மன்றங்கள் இந்நூலகங்களை நடத்துகின் தி கி.