பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fi : நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - வட்டார நூலகமானது 5 அல்லது 6 மாவட்டங்களடங்கிய பெரிய வட்டாரத்திற்குப் பயன்படுகிறது. இவ்விரண்டு நூலக அமைப்புக்களுக்குமிடையேயுள்ள முக்கிய வேற் றுமை இதுதான். ஊர்தி நூலகங்கள், இன்றையக் கிராமிய நூலகப் பணி யின் சின்னமாக விளங்குகின்றன. மாவட்ட அல்லது வட் டார நூலகத் திட்டத்தின்கீழ், கிராமங்களுக்குச் சேவை செய்வதற்கு ஊர்தி நூலகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்களில், நகர, மாவட்ட நூலகங்கள் தங்களின் நூல கப் பணிகளைச் சிறந்தமுறையில் ஒருங்கிணைத்திருக்கின்றன. இலாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் பொது நூலகப்பணி இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக நூலக வசதி கிடைக்கும்படிச் செய்ய வேண்டும் என்பது தேசியக் கொள்கையாக வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தந்த மாநில மக்களின் நூலகத் தேவைகளை அவ்வப்போது கண் டறிந்து உடனே நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு மாநி லத்திலும் அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. சில மாநிலங்களில் இந்த அமைப்பு, மாநிலக் கல்வித் துறையின் ஓர் அங்கமாக இருக்கிறது. வேறு சில மாநிலங்களில், மாநிலச் சட்டசபை நூலகம் அல்லது வரலாற்று நூலகம் அல்லது நூற் காப்புக்கூடம் (Archives) இதில் ஏதா வது ஒன்றுடன் இணைந்திருக்கிறது. நூலகப் பயணக் குழு (Travelling Libraries Commission), Lorrosolo Lujanor I5Irgu sih (State Travelling Library), 5Tavs sofejuli L sãof 5) peu gwrth (Library Extension Service), Gurrgj Firav 33; g, op (Public Libraries Commission) sraërQspovoorrub g)s55 அமைப்புக்குப் பெயருண்டு. பெயர் மாறுபட்டாலும் பணி ஒன்றுதான். மாநில நூலகப் பணியின் இன்றியமையாத ஒர் அங்கமாக இந்த அமைப்பு விளங்குகிறது.