உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曹雪 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - களில் ஒன்ருகிவிட்டது. நூலகத்தின் பணிகள் இரு முக்கிய பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன: 1. வாசகர்களுக் கான பணி-இதில் நூல் வழங்கல், தகவல்கள் தெரி வித்தல், மற்றும் அந்தந்தத் துறைகளின் அலுவல்கள் அடங்கும். 2. தொழில் நுட்பப் பணி-இதில் நூல்களைத் தேர்ந்தெடுத்தல், வாங்குதல், வகுத்தல், தொகுத்தல், பாதுகாத்தல் ஆகியவை அடங்கும். நூலகத்தின் பல்லேறு பணிகளைத் துரிதமாகச் செய்வ தற்காகச் சில நூலகங்களில் நவீனச் செய்தித் தொடர்பு முறைகளையும் போக்குவரத்துச் சாதனங்களையும், தற்கால எந்திரக் கருவிகளையும் பயன்படுத்துகிருர்கள். நூல்கள் யாருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பதிவு செய்யவும், கிளை நூலகங்களுக்கு விவரமான நூலக நூற். பட்டிகளைத் தயாரித்து வழங்கவும், இன்னும் பல அலுவல் களுக்கும் ஐ.பி.எம். கருவிகளைப் பயன்படுத்துவதன் காரண மாக நூலகர்களின் வேலைப் பளு குறைவதுடன், வாசகர் களுக்கான பணியில் அவர்கள் அதிகக் கவனம் செலுத்த முடிகிறது. சில பெரிய நூலகங்களில் தகவல் சேகரிப்புக் sigs? (Information Storage Computor) arcărgărib (pââu மான சாதனத்தைப் பயன்படுத்துகிரு.ர்கள். நூல்கள், பருவவெளியீடுகள், ஒலிப்பதிவுகள், திரைப்படங்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் முதலான நூலகத்திலுள்ள அனைத் தின் பட்டியலையும் இந்தச் சாதனம் நொடிப்பொழுதில் தயாரித்து விடுகிறது. இச்சாதனம் இப்பொழுது ஒரு ஆள்மூலம் இயக்கப்படுகிறது. ஆளுல் 1980-ல் இந்தச் சாதனம் தானே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு விடுமாம். ஒரு வாசகர் தனக்குத் தேவையான பொருளை ஒரு அட்டையில் குறிப்பிட்டு இந்தக் கருவியல் போட் டால் சில நிமிடங்களில் அந்தப் பொருள்பற்றி நூலகத்தி லிருக்கும் நால்களின் பட்டியல் அக்கருவியிலிருந்து வெளி வரும். மேலும் சில புதுமைகளையும் நாம் காணலாம். புதிதாக வாங்கிய நூல்களை அந்தந்தப் பிரிவுக்கு கன்வே