பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நூலகப் பள்ளி ஒன்றில் பட்டம் பெற்றவராகவும் உள்ள வர்கள் பொதுநூலக நூலகராக ஆவதற்குத் தகுதி பெறு கிழுர்கள். அதன் பிறகு, குழந்தை நூலகராக விரும்புபவர் களுக்குக் குழந்தை நூலகப் பணியிலும், அது தொடர்பான பொதுநூலகப் பணியிலும் தனி வகுப்புக்கள் நடத்திப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பொதுப் பயிற்சியும். தனிப் பயிற்சியும் பெற்றவர்கள்தான் குழந்தை நூலகர் களாக முடியும். குழந்தை நூலகராகப் பணியாற்று வதற்கு வெறும் படிப்பறிவும், பயிற்சியும் இருந்தால் மட்டும் போதாது. பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் மாறுபட்ட மன இயல்புகளை அறிந்து, குழந்தைகளுடன் அன்புடன் இரண்டறக் கலந்து, திறமை யுடன் பணியாற்றும் ஆர்வமும் அவருக்கு இயற்கையாகவே அமைந்திருக்க வேண்டும். 輯 குழந்தை நலப்பணி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட நூலகப் பள்ளி யொன்றில் பட்டம் பெற்றவராகவும், ஆறு முதல் எட்டு ஆண்டுக்காலம் நூலகத் தொழிலில் அனுபவம் உடையவ ராகவும் இருத்தல் வேண்டும். இந்த அனுபவக் காலத்தில், பொதுநூலகம் ஒன்றின் குழந்தைகள் பிரிவில் குறைந்தது 4 ஆண்டுகளும், ஆலோசகராக அல்லது மேற்பார்வை யாளராகக் குறைந்தது ஈராண்டுகளும் சேவை செய்திருக்க வேண்டும். பொதுநூலகப் பணியுடன், குழந்தைப் பணி களை ஒருங்கிணைப்பதில், தான் ஒரு நிபுணர் என்பதை அவர் சான்றுகள் மூலம் மெய்ப்பிக்க வேண்டியது இன்றியமை யாத ஒரு தகுதியாகும். தங்களுடைய தனித்திறமையை நிலைநாட்டவும், மேன்மேலும் அத்திறமையை வளர்த்துக் கொள்ளவும் விரும்பும் குழந்தை நூலகர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அந்தந்த வட்டாரத்திலுள்ள குழந்தைகள் அனைவருக் கும், சீராகவும் திறமையாகவும் சேவை செய்யும் வகையில் ஒவ்வொரு நூலகத்திலும் போதுமான அளவில் எல்லா