பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கூறினார். அதுகேட்ட ஒளவை அவர்கள் என்னைக் சுட்டிக்காட்டி ' இவன் அ வ ைன வி ட த் தெளிவாகப் படித்தவன்' என்று கூறிச்சென்றுவிட்டார்.

கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலு மாகச் சில கோள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன், என் அறிவு எனக்குத் தான்ே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்கவேணடி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக்கூடும் என்பதால் கவியரசை விட்டு ஒடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எ மு ப் பி ேன ன் தொல் காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் கூறும்போது எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” என்றார். அதாவது சொல் எவ்விதத்திரிபும் இல்லாமல் இருப்பது அவ்வாறு கூறிய அவரே நீயீர்’ என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும் போது நம்முன் திரிபெயர்’ என்று கூறியுள்ளார். இதுமுன்கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? தும் மின் திரி பெயராகிய நீயீர் என்பது பிறவேற்றுமைகளை ஏற்கும் போது மீண்டும் நும் எனத்திரிந்து, 'தும்மைதும்மால்' என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் என ஓடிவிட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம்; அவர் மறுத்துவிட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்தமுன் வரவில்லை. அதனால், ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தொடங்கி அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம். -

1 || 1