பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துவான் பட்டம் பெற்ற பின்னர், பி. ஒ. எல். பட்டம் பெறவேண்டும் என்ற ஆசை எழுந்தது, கல்லூரி சென்று படிக்காமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதுவதான்ால் 3 ஆண்டு ஆ சி ரி ய ர |ா க ப் பணிபுரிந்திருக்கவேண்டும்; தேர்வுக்குப் பதிவுசெய்யும் போது ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி. அதனாலும் இரண்டாம் உலகப்போர் காரணத்தால் அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தவர் அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா அணிக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய முனைந்து விட்டனர் அதனாலும் பள்ளியில் என் பழைய தமிழாசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942-இல் சேர்ந்தேன். 1944 வரை பணி புரி ந் தே ன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது.

பி. ஒ எல். தேர்வில் முதல்பகுதி. பி.ஏ. வகுப்பிற்குரிய ஆங்கில இலக்கியம் இரண்டாம்பகுதி. தமிழ் வித்துவான் தேர்வு, மூன்றாம் பகுதி, திராவிட மொழி ஒப்பிலக்கணமும், தென்னிந்திய வரலாறும் (ஆங்கிலத்தில்) இரண்டாம் பகுதியை முன்னரே படித்துவிட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வ ர ல ா ற் று க் கு ரி ய நூல்களாகிய திரு. நீலகண்ட சாஸ்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு. கோபாலன் அ வர் களி ன் பல்லவ வரலாறு, திரு. பி. டி. சீனிவாச அய்யங்கார் அ வ ர் க ளி ன் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக்கொண்டேன். கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர்மூலம் வாங்கித்தந்தார் ஆசிரியர். с

அ வ ற் ைற ப் படிக்கும்போது க ல் டு .ெ வ ல் ஒப்பிலக்கணத்தையும், பி. டி. எஸ். அவர்களின் தமிழர் வரலாற்றையும் தமிழில் மொழிபெயர்த்தால் பி. ஒ. எல். படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணினேன்.

113