பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நெடுநல்வாடை

வட கிழக்குப் பருவத்துப் பெருமழை ; கார்த்திகைத் திங்கள் இ று தி யி ல் ஓய்ந்துபோகத் , தைத்திங்கள் தொடங்கி , ஆடித் திங்கள் வரையும்-நீண்ட கோடைப் பருவத்து ஞாயிற்றின் கொடுமை தாங்கமாட்டாது துயர் உற்றிருந்த மண்ணும் மக்களும் , அக் கொடுமை தணிய மனங்குளிரச் செய்யும் சிறப்பு கார்காலத் தொடக்கத்தில் , அதாவது ஆவணி தொடக்கத்தில் பெய் யு ம் முதல் மழைக்கே உரித்து.

வானுர உயர்ந்த பழுமரங்கள் செறிந்த மலை நாட்ட கத்தே தான்் மழை பெய்யும் வாய்ப்பு மிகுதி. அத்தகைய நிலப்பகுதி, குறிஞ்சியே ஆகும். ஆனால் , கார்முகில் கொண்டல் கொண்டலாக , மலை முகடு நோக்கி எழும் காட்சி , அம் மலை நாட்டகத்தினர் பார்வையில் படுவது அரிது. மாறாக , அம்மலை நிலத்தை அடுத்த குறுங் காட்டுப் பகுதியாகிய முல்லை நிலத்தார் கண்களுக்கே . கார்மேகம், மலையை வலம்வர எழுவது போல் விரையும் காட்சி புலப்படும். அவர்களே அக்காட்சி தலம் கண்டு களிப்புறுவர். -

நீர் வளம் மிக்க நன்செய் நிலத்தில் செந்நெல் விளைவிக்கும் உழவர் பெருமக்கள், ஆண்டிற்கு மூன்று முறை

பயிர் செய்து பயன்காண வேண்டின் , முதல் பயிர்க்குத் தொடக்க காலமாக ஆவணி ைய யே தேர்ந்தெடுப்பர்

11