பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொங்க, அதைக் கைப்பற்றி இருப்பான் ஒரு வீரன் தோள் மீது. தன் வலதுகையை ஊன்றிக்கொண்டும் வேந்தன் குடைநிழற்கீழ்ச் சென்று கொண்டிருந்தான்்.

அவர்களைத் தொடர்ந்து சென்றார் புலவரும். மழை பெய்து கரிய சேறுபட்ட வழி வழியின் இரு மருங்கிலும் வரிசை வரிசையாகப் பே ார் க் கு தி ைர க ள். கடிவாளம் இடப்பட்டிருந்தன. கடிவாளக்கயிற்றில் மணிகள் கட்டப் பெற்று அழகு செய்யப் பெற்றிருந்தது. போருக்குச் செல்லும்போது முதுகில் போடப்பட்ட சேணம் இன்னமும் அகற்றப்படவில்லை. அ ந் நி ைல யி லு ம், கட்டவிழ்த்து விட்டால், காற்றென விரையத்துடித்துக் கொண்டிருந்தன. அப்போது அவற்றின்மீது விழும் மழைத்துாறல்களைத் தம் உடல்சிலிர்ப்பால் அகற்றிக் கொண்டிருந்தன.

- அவ்வழியே செல்லும் வேந்தன், ஆங்காங்குள்ள பாடிகளில் புண்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரர்கள் ஒவ்வொருவரையும் அணுகி, அன்போடு தடவிக்கொடுத்து, போரில்பெற்ற புண்ணின் அளவும் தன்மையும், அதன் இப்போதைய நிலை, அதற்குச் செய்த மருத்துவம் ஆகிய நலன்கனை வி சாரி த் துக் கொண்டே இருந்தான்். அவ்வீரர்கள் பெயரளவில் மட்டுமே வீரர்கள் அல்லர்: போர்க்க ளத் தி ல் பகைப் படையைச் சேர்ந்த யானைகளை அதிலும் ஒளிவீசும் முகபடாம் அணிந்த பட்டத்து யானை போலும் யாவைகளை அவற்றின் தொங்கும் நீண்ட கைகள் வெட்டுண்டு நிலத்தில் புரளுமாறு வீழ்த்தி வெற்றி கொண்ட வீரர்கள்: அம்மட்டோ! அத்தகுபோரில் பகை வீரர்களின் வாள்பட்டு விழுப்புண் பெற்ற விழுமிய வீரர்கள். - -

.82