உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96

பதிற்றுப்பத்து தெளிவுரை

 கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப இளையினிது தந்து விளைவுமுட் டுறாது 5 புலம்பா வுறையுள் நீதொழில் ஆற்றலின் விடுகிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவறற் காலையும் நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் 10 சீருடை வியன்புலம் வாய்புரந்து மிகீஇயர் உவலை குடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூசல் அல்லது வெம்மை யரிதுநின் அகன்றலை நாடே.

தெளிவுரை : கோடையின் வெம்மையானது நீட்டித்தலினாலே குன்றிடமெல்லாம் பொலிவிழந்து தோன்றின. அருவிகள் நீர் வற்றியவாய் உலர்ந்தன. இத்தகைய பெருவறட்சி ஏற்பட்ட காலத்திலும், கரையளவும் உயர்ந்தபடி நீரானது பெருகி வழிந்துசெல்லுவதாக விளங்கிற்று அகன்ற இடத்தை யுடைய பேரியாறு. அதன் கரைமருங்குள்ள சிறப்புடைய அகன்ற விளைநிலப் பரப்பெல்லாம், தம்மிடமெங்கணும் நீர்நிறைந்து வாய்க்காலளவுக்குத் தாமும் நிரம்பப்பெற்றன. மேய்ச்சலுக்கு விடப்பெற்ற கரம்பை நிலங்களிலுள்ள வெடிப்புகளெல்லாம் நீரால் நிறையப்பெற்றன. தழைகளைத் தன் மேற்புறத்துச் சூடிக்கொண்டதாகச் சினங்கொண்டாற் போல விரைந்துவருகின்ற மிக்க வெள்ளமாகிய செந்நீரிடத்தே, புதுப்புனல் ஆடுவாரும், கரைகாப்பாருமாக, மக்கள் செய்யும் ஆரவாரத்தையல்லாமல், நின் பரந்த இடத்தையுடைய நாட்டினிடத்தே, வேற்றாரின் படையெடுப்பால் தோன்றும் வெம்மையென்பது உண்டாதற்கு அரிதாகும் , பெருமானே! n

பெரு வளமை கொண்டாரான பகைவர்களது பசிய கண்களையுடைய யானைப்படைகளின் தொடர்ந்த வரிசை முற்ற அழியுமாறு, தமது வலிமையைச் செலுத்தி எறிந்த, குருதிச் கறைபடிந்த பாதங்களையும், கழல்விளங்கும் கால்களையும், விரைந்த செலவையுமுடைய பெருமறவர்கள், மிக்க விசையுடன் செலுத்தும் தம் விற்றொழிலையே மறக்குமாறு, காவற்றொழிலை இனிதாகச் செய்து, விளைபொருள்கட்குக் குறைவில்லாமற்படிக்கும் செய்து, அவர்கள் தமக்கு