பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நான்காம் பத்து

127

 வீயா யாணர் நின்வயி னானே தாவா தாகும் மலிபெறு வயவே மல்லல் உள்ளமொடு வம்பமர்க் கடந்து செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று பனைதடி புலத்தின் கைதடிபு பலவுடன் 5

யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார் மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர் பொறித்த போலும் புள்ளி எருத்திற் புன்புற எருவைப் பெடைபுணர் சேவல் குடுமி எழாஅலொடு கொண்டுகிழக்கு இழிய 10

நிலமிழி நிவப்பின் நீள்நிரை பலசு மந்து உருவெழு கூளியர் உண்டுமகிழ்ந் தாடக் குருதிச் செம்புனல் ஒழுகச் செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே!

தெளிவுரை : இடையீடுபடாத போர்வெற்றியாகிய வருவா யினையுடைய நின்னிடத்து, மிகுதி பெற்ற வலிமை என்பதும் என்றும் கெடாதே நிலவும். வளமான நெஞ்சுரத்தோடு பகைவரின் புதிதுபுதிதான போர்முறைகளை எல்லாம் எதிர்த் தழித்து, அவரை வென்று, போரில் மேம்பட்ட வலியினையுடைய நின் மறவரோடும், அப் பகைவரின் நாட்டிற்கே சென்று அவரை அழிப்பவன் நீயாவாய். பனைமரங்கள் வெட்டப் பெற்றுக் கிடக்கும் ஒரு கொல்லைப் புறத்தைப் போலப் பலவான யானைகளின் துதிக்கைகள் வெட்டப் பெற்றுக் கிடக்கின்ற, வாட்கள் ஒன்றோடு ஒன்று கலந்த முன்னணிப் படைப்போரிலேயே, வீரர்களும் குதிரைகளும் யானைகளுமாகிய பட்டு வீழ்ந்த பிணங்களை உண்ணும்பொருட்டாகப், பொறித்து வைத்தாற்போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும், புல்லிய மேற்புறத்தினையுமுடைய கழுகினது பெட்டையோடு சேர்ந்த சேவல்கள், உச்சிக்கொண்டையினையுடைய எழாஅல் என்னும் பறவைகளோடு, வானத்திலிருந்து கீழாக இறங்கி வரும். பாரமிகுதியாலே நிலம் சரிவதற்குக் காரணமான பிணக்குவியல்களின் நெடிய வரிசைகள் பலவற்றைச் சுமந்துகொண்டு, அச்சம் பொருந்திய கூளிப்பேய்கள் அவற்றை உண்டவையாய் மகிழ்ச்சியோடு ஆடும். குருதியாகிய செம்புனல் ஆற்றொழுக்கைப் போலப்