பக்கம்:பழைய கணக்கு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

யாருக்கும் கூத்து நடக்கப் போவதே தெரியாதே, கூத்தைப் பார்க்க யாரும் வர மாட்டார்களே, ஆடியன்ஸுக்கு என்ன செய்வது என்று யோசித்தோம். எதிரே உட்கார்ந்து கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருந்த பத்துப் பதினைந்து வாண்டுகள்தான் ஆடியன்ஸ்?

எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொண்டு, யாராவது வந்து விட மாட்டார்களா என்று ஒரு ஏக்கம்.

அப்போது பார்த்து மாட்டுக் கொட்டகையின் கதவு தபதப வென்று தட்டப்பட்டது. எங்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். அப்பாடா! நம்ம கூத்துக்கு ஆடியன்ஸ் வந்து விட்டார்கள் என்ற திருப்தி.

அவசரமாகப் போய்க் கதவைத் திறந்தபோது, மந்தைக்கு மேயப் போன மாடுகள் திரும்பி வந்து நின்று கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/161&oldid=1146157" இலிருந்து மீள்விக்கப்பட்டது