உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அன்றே நாடகம் பார்க்கப் போயிருந்தேன். நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக வ. ரா. விடம் சொன்னேன்.

“நீ ஏன் கல்கியில் ஒரு விமரிசனம் எழுதக் கூடாது?” என்று கேட்டார். வ. ரா.

“ஆசிரியரிடம் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அதே சூட்டில் அந்த நாடகத்தைப் பற்றிய ஒரு விமரிசனத்தை எழுதி கல்கியிடம் காண்பித்தேன். கல்கி அதை அடுத்த இதழிலேயே பிரசுரித்து விட்டார். அந்த விமரிசனத்தால் நாடகம் இன்னும் பரவலாகப் பேசப்பட்டு நாடகத்துக்கு மேலும் கூட்டம் அதிகமாயிற்று.

விமரிசனத்தைப் படித்த வ. ரா. ரொம்பவும் மகிழ்ந்து போய், “உனக்கு நூறு ரூபாய் பணம் தருவதாய்த் தீர்மானம் பண்ணி இருக்கிறேன். சகஸ்ரநாமத்திடம் நூறு ரூபாய் வாங்கிக் கொள்!” என்றார். நான் எதுவும் பதில் சொல்லவில்லை. எனக்குப் பணம் தேவைதான். ஆனால் விமரிசனம் எழுதியதற்காகப் பணம் வாங்கினால் அது லஞ்சம் வாங்கியது போல் ஆகிவிடும் என்பதால் பேசாமலிருந்து விட்டேன். அதனால் வ.ரா.வையும், சகஸ்ரநாமத்தையும் அப்புறம் வெகுநாள் வரை பார்க்காமலே இருந்து விட்டேன்.

ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து பேராசிரியர் கல்கி ஒரு நாள் ஏதோ பேச்சுவாக்கில், “வ. ரா. எப்படி இருக்கிறார்?” என்று என்னிடம் கேட்டார்.

“நிரந்தரமான வருமானமில்லை; ஆனாலும் அவர் முகத்தில் எதுவும் தெரிவதில்லை” என்றேன்.

“சிறுகதைப் போட்டி ஒன்றை கல்கியில் அறிவித்து அதற்கு வ. ரா.வை நீதிபதியாய் நியமிக்கலாமென்றிருக்கிறேன். அந்த வகையில் அவருக்கு ஏதாவது பண உதவி செய்யலாமே!. ஆனால் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ?” என்று. தயங்கினர் கல்கி.

“நான் வேண்டுமானல் போய்ப் பேசிப் பார்க்கட்டுமா?” என்று கல்கி அவர்களிடம் கேட்டேன். “சரி” என்று கூறிய கல்கி என்னை வ.ரா.விடம் தூது அனுப்பி, “சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க முடியுமா?” என்று விசாரித்து வரச்சொன்னர்,

வ. ரா.வைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.

“அப்படியா? தமிழ்நாட்டில் பல பேர் ரொம்ப நன்றாகக் கதை எழுதுகிறார்கள். அவர்கள் எழுத்தையெல்லாம் படித்துப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாயிருக்கும். ஆனால் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/17&oldid=1145666" இலிருந்து மீள்விக்கப்பட்டது