உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

பதியும் சுவாரஸ்யமான விஷயங்களை மட்டுமே கட்டுரையாக எழுத வேண்டும்.”

“மறந்து போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் குறித்துக் கொண்டேன்” என்றேன்.

“நல்ல விஷயங்கள் என்றால் அது எப்படி மறந்து போகும்? மறந்து போகக் கூடிய விஷயங்கள் என்றால் அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல, பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்பதுதானே பொருள்?” என்றார்.

அவர் அன்று சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் வேதவாக்காய்ப் பதிந்து விட்டன. இந்தக் குறிப்பெழுதும் வேலையை அன்றோடு விட்டுவிட்டேன்.

ஒரு விஷயத்தை எழுதுவதற்கு முன்னால் அதைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் படித்து அறிந்து கொண்ட பின்னரே கல்கி பேணாவைக் கையிலெடுப்பார். ‘சிவகாமியின் சபதம்’ எழுதும்போது புத்த பிட்சுவைப் பற்றி எழுத வேண்டியிருந்தது. அதற்காக புத்த பிட்சு, ஒருவரை எங்கிருந்தோ அழைத்து வரச் சொல்லி, அவரது நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்களை யெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டார். அந்தக் காலத்தில் கல்கி அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/24&oldid=1145687" இலிருந்து மீள்விக்கப்பட்டது