உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழைய கணக்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பேச்சு. குரலில் கம்பீரம். பார்த்த மாத்திரத்திலேயே, மரியாதை தரப்பட வேண்டியவர்” என்ற உணர்வைத் தூண்டக் கூடிய தோற்றம்.

ஆதித்தனாருக்கு என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. “தினமும் இங்கே வந்து விடுங்க” என்றார். விடுவேனா? தினமும் போனேன். ரொம்ப நேரம் பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். கல்கி எழுத்தை விமரிசிப்போம். மணி நாலு ஆனதும் ஹோட்டலுக்கு அழைத்துப் போவார். எது ஆர்டர் பண்ணினாலும் இரண்டு இரண்டாகத்தான் பண்ணுவார். இரண்டு வடை, இரண்டு ஸ்வீட், இரண்டு தோசை என்று எல்லாமே டபிள் டபிள்! அதே மாதிரி எனக்கும் டபிள் டபிள்!

நான் எற்கனவே பசியால் காய்ந்து போனவன். எனவே அந்த இரண்டிரண்டு வரப்பிரசாதமாய் அமைந்தது.

அப்புறம் இரண்டொரு மாதத்தில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு வீடு பிடித்து அந்த வீட்டில் ‘தமிழன்’ பத்திரிகையைத் தொடங்கினார். அதுவரை அவருடைய தமிழன் பத்திரிகை மதுரையிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. திரு கோ. த. சண்முகசுந்தரம்தான் அதன் ஆசிரியர். நான் உதவி ஆசிரியர். சம்பளம் ஐம்பது ரூபாய்.

கொஞ்ச நாள் கழித்து திரு ஆதித்தன் அவர்கள் ‘தினத்தந்தி’ ஆரம்பித்தார். “நீங்கள் இஷ்டப்பட்டால் தினத்தந்தியிலும் எழுதலாம்" என்று என்னிடம் கூறினார். தினத்தந்தி வெளியான முதல் நாள் மட்டும் நான் சின்னச் சின்ன செய்திகளை மொழிபெயர்த்துத் தந்தேன். தினத்தந்தி ஆரம்ப காலத்தில் கையால் செய்த பழுப்பு நிறக் காகிதத்தில் வந்து கொண்டிருந்தது. பி. ஸ்ரீ. யின் மகன் திரு நாராயணன் தினத்தந்திக்கு வந்து சேர்ந்தார். அவர் நட்பும் எனக்குக் கிட்டியது.

அப்போது தமிழ்ப் படங்கள் மிக நீளமாகப் பதினாறாயிரம் அடிவரை எடுக்கப் படுவது வழக்கம். அதைப் பதினேராயிரம் அடிக்குக் குறைக்க வேண்டும் என்று கல்கி தம் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். அதை ஆதரித்து ‘நாலு பேர் அபிப்ராயம்’ என்ற தலைப்பில் நான் ஒரு நகைச்சுவைக் கட்டுரையைத் தமிழனில் எழுதினேன். கல்கி அதைப் படித்திருக்கிறர். பி. ஸ்ரீ. யும் அவரது மகன் நாராயணனும் தீபாவளியன்று கல்கியைப் பார்க்கப் போயிருந்தபோது அவர்களிடம் அந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டு, சாவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/85&oldid=1146029" இலிருந்து மீள்விக்கப்பட்டது