பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

பாண்டிமாதேவி / முதல் பாகம்


நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்துவிட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்றுகொண்டிருந்கும்போது நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஒடும் காலடியோசை கேட்டது.


26. வேடம் வெளிப்பட்டது

குழல் மொழியின் முகத்தில் தென்பட்ட வியப்பைக் கண்டு துறவி சிரித்தார். “இந்த அறைக்குள் இருப்பதை நான் எப்படி இவ்வளவு சரியாகக் கண்டு பிடித்துக் கூறினேன் என்று தானே நீ வியப்படைகிறாய்?”

குழல்மொழி அவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் ஒரு கணம் அவருடைய முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் அப்படி என்னையே பார்க்கிறாய்? என்னுடைய ஆருடத் திறமையைப் பரிசோதிப்பது போல் நீ கேள்வி கேட்டாய். நான் பதில் கூறினேன். இத்தனைக் கட்டுக் காவல்களையும் கடந்து யவன வீரர்கள் வாளேந்தி நின்று அயராமல் காக்கும் இந்த இடத்துக்குள் இருப்பதைப் புள்ளி பிசகாமல் தெள்ளத் தெளிய அடிகள் எப்படிக் கூறினாரென்று சிந்தித்துப் பார்க்கிறாயா?”

அடிகளின் கேள்வியைக் கவனிக்காதது போல் இருந்து விட்டு, “சரி! வாருங்கள். மேலே சுற்றிப் பார்க்கலாம்” என்று கூறி அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் குழல்மொழி.

“முடியாது பெண்ணே! நான் ஏமாறமாட்டேன். இந்த யவன வீரர்களின் காவலுக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளாமல் நான் இங்கிருந்து ஒர் அடி கூட நகர மாட்டேன்!” என்று கூறி அவர் பிடிவாதமாக