பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தமிழ்ப் பள்ளு தமிழ் ஆடுவமே பள்ளுப் பாடுவமே! ஆட்சியின் மாட்சியில் கூடுவமே! 1 கோடுயர் வேங்கடக் குன்றமுதல் நல்ல குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே! நாம் ஆடுவமே... மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் தமிழ் மக்களென் றேகுதித் தாடுவமே! கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் நல்ல கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே! நாம் ஆடுவமே... மூவமென்றே சொல்லல் முத்தமிழாம் புவி மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்! ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே! புவி நாம் எனவே குதித்தா டுவமே! நாம் -ஆடுவமே... வானிடை மிதந்திடும் தென்றலிலே, மணி மாடங்கள் கூடங்கள் மீதினிலே, தேனிடை ஊறிய செம்பவழ சேயிழை யாரொடும் ஆடுவமே! நாம் - ஆடுவமே... இதழ்ச் ஆடுவமே... கவிதைகள், காவியம், உயர்கலைகள் உளம் கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம். குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம் இங்குக் குறையில் வாம்என் றாடுவமே நாம் ஆடுவமே...