பக்கம்:பாலைச்செல்வி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஆ புலவர் கா. கோவிந்தன் ஒளி விசும் அவள் முகம் முதலாகத் தாமரை இதழ் போலும் தாள்வரையுள்ள அவள் மேனியின் நலங்களைக் கண்டும், அவள் வாய்மொழியையும், வளை ஒலியையும் கேட்டும் மகிழ்ந்து மனம் மயங்கியிருக்கும் இயல்புடை யான் அவள் கணவன். அத்தகையான், ஒருநாள் அவளை அன்போடு அழைத்து, அருகில் அமர்த்தித் தங்கள் இன்ப வாழ்க்கை இடையூறின்றி இனிது நடைபெறுதற்கும், அவ் வாழ்க்கை அனைவராலும் பார்த்துப் பாராட்டத் தக்க புகழ் பெற்று விளங்குதற்கும், பொருளின் துணை இன்றியமையாதது என்பதை எடுத்துரைத்து, இறுதியாக, அப்பொருள் தேடி வரும் விருப்பம் உடையேன். ஆகவே, அது கிடைக்கும் வெளிநாடு சென்றுவர விடை கொடுப்பாயாக!” என்று வேண்டிக் கொண்டான். வெளிநாடு செல்ல விரும்புகிறேன்! என்ற அவன் சொல், அவள் உள்ளத்தின் அமைதியை அழித்துவிட்டது. ஆயினும் பொருளின் இன்றியமையாமை குறித்து, அவன் கூறிய சொற்கள் உண்மையாம் என்பதை உணர்ந்தமை யால், அவன் முயற்சியை மறுக்க அஞ்சினாள். அதனால், போகற்க என்று அவனைத் தடுக்காது, "அவ்வாறாயின், என்னையும் உடனழைத்துச் செல்க!” என்று வேண்டிக் கொண்டாள். "என்னையும் உடனழைத்துச் செல்க!” என்ற அவள் சொல் கேட்டு நடுங்கிற்று அவ்விளைஞன் உள்ளம். பொருள் தேடிப் போவார் கடந்து செல்ல வேண்டிய காட்டின் கடுமையும், அவள் மென்மையும், அவன் மனக் கண்முன் மாறி மாறித் தோன்றி, அவனை மருட்டிற்று. போர் போர் போர் என, எப்போதும் போர் வெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/102&oldid=822102" இலிருந்து மீள்விக்கப்பட்டது