பக்கம்:பாலைச்செல்வி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 121 அவர் கைப்பொருள் கவர்ந்துண்ணும் வாழ்க்கை உடைய ராய்த், தம் கொடுஞ்செயல் கண்டு, தம்மைக் கொன்று அழிக்க, அரசர் பலர், படைபல கொண்டு வந்து வளைப்பினும், அப்பெரும் படையினை அம்பேவி வேறல் ஆண்மையாகது, ஆதலின், அதற்கு வெட்கித் தம் வில்லின் நாணைத் தெறித்து எழுப்பும் பேரொலி கேட்டே, அவரை அஞ்சி ஒடச் செய்யும் ஆற்றல் உடையராய் வாழும் ஆறலைக்கள்வர் நிறைந்தது. நின் பிரிவு பொறாது வருந்தும் இவள், அவ்வழியின் இயல்பு இஃதாம் என்பதையும் அறியின், வருத்தம் மிகுந்து வாடி உயிர் இழப்பள். ஆகவே, அவளை விடுத்துப் போவது அறிவுடைமையாகாது!” எனக் காட்டின் கொடுமையினைக் கூறுவாள் போல், தான் கூறக் கருதிய அவ்வறவுரையினைக் கூறினாள். அத் தோழியின் அறிவுத் திறம் கண்டு அகம் மகிழ்வோமாக, "அரிமான் இடித்தன்ன அஞ்சிலை வல்வில் புரிநாண் புடையில் புறங்காண்டல் அல்லால் இணைப்படைத் தானை அரசோடு உறினும், கணைத்தொடை நானும், கடுந்துடி ஆர்ப்பின், எருத்து வலிய எறுழ்நோக்கு இரலை 5 மருப்பின் திரிந்து மறிந்துவீழ் தாடி, உருத்த கடும் சினத்து ஒடா மறவர் பொருள்கொண்டு புண்செயின் அல்லதை, அன்போடு அருள்புறம் மாறிய ஆரிடை அத்தம், புரிபு புறம்மாறிப் போக்குஎண்ணிப் புதிதிண்டிப் 10 பெருகிய செல்வத்தால் பெயர்த்தரல் ஒல்வதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/123&oldid=822125" இலிருந்து மீள்விக்கப்பட்டது