பக்கம்:பாலைச்செல்வி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 125 அவள் பேரழகு பாழ்பட்டது. தான் பிரியின், அவள் இவ்வாறு ஆவள் என்பதை அறிந்தும் அவன் பிரிந்து விட்டான். அவள் நிலை கண்டு ஊரார் உறுதுயர் கொண்டனர். "இவளை இவ்வாறு அழிய விடுத்து, அவ்வழிவிற்கு அஞ்சாது பிரிந்து போன அவனை என்னென்பது அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை அறியாது பிரிந்து போன அவன் அறியாமை யினை என்னென்பது தன்பால் அன்பு கொண்டு தன்னை அடைந்தார் கண்ணிர் விட்டுக் கலங்கக், கொடுமை செய்து போவாரைத் தெய்வம் துன்புறுத்தும் என்பர். இவளுக்குத் துயர் விளைத்து, அவ்வாறு துயர் உறச் செய்த தன் கொடுஞ்செயலுக்கு அஞ்சாது சென்ற அவனுக்கு, அத் தெய்வத்தால் யாது கேடு வந்துறுமோ?” என ஊரார் உரைப்பன கேட்டாள் அப்பெண். கற்பிற் சிறந்த அவள், அந்நிலையே தன் துயரினை மறந்தாள். தான் துயருறின், தன் துயர் நிலை காணும் தெய்வம், அத்துயர்க்குக் காரணமாயினான் இவன் எனத் தன் கணவனைத் தண்டிக்குமே என அஞ்சினாள். அதனால் தன் துயரினை மறைத்துக் கொண்டாள். அம்மட்டோ! தனக்குத் துயர் செய்தான் என்பதைக் காரணம் காட்டி, அவனைத் துன்புறுத்துவது ஒழிந்து அருள் புரியுமாறு அத் தெய்வங்களை வேண்டிக் கொள்ளவும் விரும்பினாள். அவ்வாறு விரும்பியவள், அப்போதே தன் ஆருயிர்த் தோழியை அழைத்துத், தோழி! நம் காதலர், நாம் நம் இயற்கை அழகும் இழந்து சங்குத் தனித்துக் கிடந்து, துயர் உறப், பொருள்மீது கொண்ட பேராசையால், அன்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/127&oldid=822129" இலிருந்து மீள்விக்கப்பட்டது