பக்கம்:பாலைச்செல்வி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 143 கொள்கையாம் என அறிக. நிற்க. இன்பம் உளது; இளமைச் செல்வமும், இருவர் உள்ளமும் ஒன்றப் பிறக்கும் உயர்ந்த காதலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றார்க்குப் பேரின்பம் தர வல்லன. அவ்விளமையும், காதலுமே அவர் கருதும் இன்பம்; அவையல்லது வேறு இன்பத்தை அவர் அறியார்; இன்பம் என வேறு ஒரு பொருள் உளது என்றும் அவர் எண்ணார்; இன்பம் என்பது வேறு எங்கோ கிடைக்கும் பொருள் என்ற எண்ணம், இளமை கழிந்தார்க்கும், உள்ளம் ஒன்றிய காதல் வாய்க்கப் பெறாதார்க்குமே உண்டாம். ஆகவே, பொருளே காதற் பயனளிப்பது எனும் கருத்தும் பொருந்தாது என அறிக. நிற்க. பொருள் உடையார் வாழ்வே, பயன்மிக்க வாழ்வு, அவர் வாழ்வில் மட்டுமே இன்பம் இடையறாது எய்தும் என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. வாழ்வைப் பயனுடைய தாக்குவது, இன்பம் நிறைந்ததாக ஆக்குவது பொருள் அன்று; காதலரின் ஒன்றுபட்ட மனமே. காதலர் இருவர், உடுக்க முழு ஆடையும் கிடைக்கப் பெறாது, உடலின் ஒரு பாதியைக் கிழிந்த கந்தல் ஒன்று மறைக்க, மற்றொரு பாதியைத் தம் கைகளையே ஆடையாக் கொண்டு மறைத்து மானங் காக்கும் கொடிய வறுமை வாழ்வுடையராயினும், அவர் மனம் மட்டும் ஒன்று கலந்து விடுமாயின், அவ்வறுமை வாழ்வு அவர்க்கு வாட்டம் அளிக்காது; அவ்வறுமை வாழ்வினும் அவர்கள் இன்பமே காண்பர்; அவர் பெற்று வாழும் இன்பம் நிறைந்த அமைதி வாழ்வு, செல்வர்க்கும் வாய்க்காது; அதற்கு மாறாகச் செல்வம் கொழிக்கும் வாழ்வில் செம்மாந்து வாழும் கணவன் மனைவியர்க்கிடையே, உள்ள ஒற்றுமை இல்லா யின், அவர் மனம் அவன்பால் பிணைக்கப்படாதாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/145&oldid=822149" இலிருந்து மீள்விக்கப்பட்டது