பக்கம்:பாலைச்செல்வி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 புலவர் கா. கோவிந்தன் கூடாது. வந்து நம் வாயிற்கண் நின்று, தம் வறுமை நிலை காட்டி வருந்தி இரப்பார்க்கு, வாரி வழங்க, நீ சென்று தேடித் தரும் பொருள் சிறப்புடையதே என்றாலும், அது, அவளை இழவாமல் பேணுதற்குத் துணை புரியும் இயல்பும் உடையதாதல் வேண்டும்; அப்பொருள், நின் வாழ்க்கையைப் பயன் நிறைந்த தாக்குதல் வேண்டும்; அதுவே பொருட்பயனாம். ஆனால், புகழ் கருதி நீ தேடிக் கொணரும் பொருள், நின் மனையாளை இழத்தற்குத் துணை புரிதல் கூடாது; மனையாளை இழந்து நீ மாண்புறுதல் இல்லை; lpóõ)óôT li jfTóô)®YF இழக்கப் பண்ணி, நின்னை மாளாத் துயர்க்கு உள்ளாக்கும் பொருள், உண்மையில் பொருளாகாது; அது நின் வாழ்வைக் கெடுக்கும் மருளாம். ஆகவே, மனையாளைப் பிரியா திருந்தே பொருளிட்டும் வழியுண்டேல், அதை அறிந்து மேற்கொள்வதல்லது, பிரிவுத் துயர் பொறாது, அவள் இறந்துபோமாறு, தனித்திருக்க விடுத்துப் பிரிந்து சென்று பொருளிட்டும் முயற்சியினை மேற்கொள்வது மாண் புடைத்தன்று படும் பெருந்துயரை அவனுக்கு நினைப்பூட்டினாள். புகழ்மீதும், அப்புகழைத் தரும் பொருள்மீதும் கொண்ட ஆர்வமே, தன் அகக்கண் முன் நிற்க, தோழி கூறிய அறிவுரை எதையும் ஏற்றுக் கொள்ளாது, மதங் கொண்டவிடத்துப் பாகனுக்கோ, குத்துக்கோலர்க்கோ p: என்று கூறிப் பிரிந்தவழி, அவன் மனைவி அடங்காது திரியும் யானைபோன்று, பொருள் தேடி வரப் புறப்பட்டே தீர்வன் எனத் துணிந்து நின்ற அவன், அம்மதமிக்க யானை, தன்முன் நின்று ஒருவர் யாழ் இசைக்கக் கேட்ட அக்கணமே, ஆசிரியனுக்கு அடங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/16&oldid=822165" இலிருந்து மீள்விக்கப்பட்டது