பக்கம்:பாலைச்செல்வி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 167 தலைவன் பிரிவுக் குறிப்புணர்ந்த தோழி, இளமை யிற் பாராட்டி முதுமையிற் கைவிடல் பொருந்தாது எனக் கூறி அவன் போக்கினைத் தவிர்த்தது. 1. வழிமொழிந்து - வணங்கிய சொற்களைக் கூறி, 4. புலன்உடை மாந்திர் - அறிவுடைய மக்களே, 5. தாய் - தாவி (விரும்பி), 6. தாவார் - உறுதி கெடார் 7. அருந்து - ஆர்ந்து என்பதன் திரிபு, உண்டு என்பது பொருள்; இறல் - இறப்பு, இறந்துபாட்டினை, இறல் கொடுக்குங்கால், நின் பொருள் வேட்கை இடத்து ஏதிலார் கூறுவது எவன் என முடிக்க; ஏதிலார் - அன்பை மறந்து அவன் விட்டுச் செல்வதால் அவனுக்கு அயலாராகிய தோழியும் தலைவியும், 9. நேர்முகை - வரிசையான அரும்புகள்; நிரைத்த - வரிசையாக அமைந்த, செறிமுறை - செறிந்துநிற்கும் பற்களை; 11. பறிமுறை - வீழ்ந்து போகும் நிலை; 12. நெய் = எண்ணெய், மணி - நீலமணி. 13. ஐவகை - ஐவகையாய் அமையும் கூந்தல்; 14. செய்வினை - கூந்தலுக்குச் செய்யும் அழகு, 15. பாசரும்பு - முற்றாத இளைய அரும்பு; ஏய்க்கும் - ஒக்கும்; 19. அடர்பொன் - தகட்டுப்பொன்; அவிர் - ஒளி, அவ்வரி - அழகிய அணங்கு 21. படர் கூற - துன்பத்தைச் சொல்ல; தொடர்கூர- நின் அன்புத் தொடர் மிக வேண்டிய காலத்தில்; 22 துவ்வாமை - நுகராமைக்குக் காரணமாய தீவினை; தொடர் கூரத் துவ்வாமை வந்தக்கடை - எங்கட் படர்கூற நின்றதும் உண்டோ என, மாற்றிப் பொருள் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/169&oldid=822175" இலிருந்து மீள்விக்கப்பட்டது