பக்கம்:பாலைச்செல்வி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ: 175 அவர்கள் வாழ்க்கை ஊரார் போற்ற, உயர்ந்தோர் வாழ்த்த, இனிது நடைபெற்று வந்தது. சின்னாள் வரை யிலும், தன் மனைவி.பால் கொண்ட காதலால், தன் கடமையை மறந்திருந்த அவன், ஒரு நாள், அக் கடமை யுணர்ச்சிக்கு வயப்பட்டான். அதனால் பொருள் தேடிப் போகும் எண்ணம் கொண்டான். பொருள் தேடிப் போகக் கருதி விட்டானேனும், அவளைப் பிரிந்து போக அவன் உள்ளம் இசையவில்லை. தனியே விடுத்துச் செல்லின், அத்தனிமை பொறாது அவள் தளர்வளே எனக் கவலை கொண்டது அவ்வுள்ளம். அதனால், அவள்பால் முன்னினும் அன்பு மிகுந்தது. அதன் விளைவாய், அவளை முன்னினும் அதிகமாகப் பாராட்டத் தொடங்கினான். தன் கணவன்பால் நிகழும் அம் மாறுதலைக் கண்டாள் அப்பெண். அம் மாற்றத்திற்கு யாதோ காரணம் உளது எனக் கூறிற்று அவள் உள் உள்ளம். அக் காரணம் யாது என்பதை ஆராய்வதில் அவள் சிந்தனை சென்றது. கல்வி, பொருள், காவல் முதலாயின கருதி, அவன் பிரிந்து விடுவனோ? அப் பிரிவுணர்ச்சியின் விளைவுதானோ அவன் பாராட்டில் காணும் புதுமை : என்றெல்லாம் ஒடிக் கொண்டிருந்தது அவள் சிந்தனை. அந்நிலையில் ஒருநாள் இரவு, இருவரும் உறங்கச் சென்றனர். அவள் தோளிற் கிடந்தவாறே அவன் உறங்கி விட்டான். அவன் போக்கில் காணும் புதுமைக்காம் காரணத்தைக் காணும் ஆர்வமிகுதியால், அவள் உறக்கம் கொண்டிலள். விழித்துக் கொண்டே அவன் அருகிற் கிடந்தாள் அவள். அந்நிலை யில், திடுமென, அவன் வாயினின்றும் சொற்கள் சில வெளியாம் ஒலி கேட்டு, உற்று நோக்கினாள். பொருளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/177&oldid=822184" இலிருந்து மீள்விக்கப்பட்டது