பக்கம்:பாலைச்செல்வி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ళీ புலவர் கா. கோவிந்தன் மலர்களால் நிறைந்து மணம் வீசின. தாம் விரும்பும் அம் மலர்களிற் படிந்து வேண்டுமளவு தேனை உண்டு மகிழ்ந்து கிடந்தன வண்டுகள். அரிய பல தவம் செய்து பெற்ற நல்வினைப் பேறுடையார், அந்நல்வினைப் பயனாய்த் தாம் விரும்பும் பொன்னும் பொருளும், புகழும் போகமும் பெற்று மகிழும் செயலை அவ்வண்டின் செயல் நினைப்பூட்டக் கண்டு மகிழ்ந்தாள் அப்பெண். அவ் வண்டே போல் தன் கணவனை அடைந்து, பேரின்பம் நுகரவல்ல பெருந்தவப் பயன் தனக்கு வாய்த்திலதே என வருந்தினாள். வருந்தியவள், நல்வினைப் பயன் நினைத்தபோதே வந்து வாய்ப்பது இல்லை; வண்டுகள் இன்பம் துய்க்குமாறு, மலர்கள் தேன்நிறைதல் இளவேனிற் பருவத்தே நிகழ்வதுபோல், தான் இன்பம் நுகருமாறு கணவன் மீண்டும் வந்து மனை புகுதலும் இளவேனிற் பருவத்தே வாய்க்கும் என உணர்ந்தாள். அவ் வுணர்வால், அப் பருவம் வருந்துணையும், அவன் பிரிவை ஒருவாறு ஆற்றியிருந்தாள். அப்பருவம் வந்து விட்டது. அதனால் அவன் வரவினை எதிர் நோக்கினாள். ஆனால் அவன் வந்திலன். அவன் வாராமையால் அவள் வருத்தம் அளவிறந்தது. ஆயினும் அந்நிலையிலும், அவளுக்கு அவன் சொல்லில் மாறா நம்பிக்கையிருந்தது. இளவேனிற் பருவம் வந்து விட்டது என்பதை அறியின், அவன் ஒரு பொழுதும் அவண் நில்லான். விரைந்திவண் வந்து சேர்வன். ஆனால், அப் பருவம் வந்து விடவும், அவன் வாராமைக்குக் காரணம், தன்பால் அன்பின்மையன்று; கருமமே கண்ணாயிருக்கும் அவன், வினை மிகுதியால், வேனிற்பருவம் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/217&oldid=822228" இலிருந்து மீள்விக்கப்பட்டது