பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் - கற்பியல் - புலவிநுணுக்கம் 119 (இ-ரை.) உள்ளினேன் என்றேன் பிரிந்து போயிருந்த காலத்தில் உன்னை ஒருபோதும் மறவாது நினைத்திருந்தேன் என்னுங் கருத்தில், “உள்ளி னேன்" என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் உடனே அதை ஒருகால் மறந்திருந்து பின்பு நினைத்துக்கொண்டேன் என்று நான் கூறியதாகக் கருதி, என்னை யிடையே மறந்துவிட்டீரென்று சொல்லி, அதற்கு முன்பு என்னைத் தழுவுதற்கிருந்தவள் அதைச் செ-யாது அன்றே புலவியை மேற்கொண்டுவிட்டாள். எதிர்நிலை யளவை வகையால் உள்ளுதலுக்கு மறுதலையான மறத் தலையும் உட்கொண்டு புலந்தாள் என்பதாம். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 1317. வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று. (இதுவுமது.) (இ-ரை.) தும்மினேனாக வழுத்தினாள் என்னொடு கூட இருந்தவள் யான் தும்மினேனாக வழக்கம்போல் "நீடு வாழ்க" என்று வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றி, நும்மாற் காதலிக்கப்பட்ட மகளிருள் யார் நினைத்ததனால் தும்மினீர் என்று சொல்லியழுதாள். அன்பரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மலெழும் என்பது மகளிர் குருட்டுக்கொள்கை. அதை மெ-ந்நெறிக் கொள்கையாகக் கொண்டு புலந் தாள் என்பதாம். வழுத்து என்னுஞ் சொல் வாழ்த்துதற் பொருளில் வந்தது. வாழ்த்துதலும் புலத்தலும் தம்முள் இயையாமையின், 'அழித்து' என்றான். 1318. தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று. (இதுவுமது.) (இ-ரை.) தும்முச் செறுப்ப எனக்குத் தும்மல் தோன்றியபோது, என் காதலி யாருள்ளித் தும்மினீரென்று புலத்தலஞ்சி, அதனை யடக்க; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நும் காதலியார் நும்மை நினைத்தலை எனக்கு மறைக்கின்றீரோ என்று சொல்லி யழுதாள்.