பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் களவியல் - தகையணங்குறுத்தல் 1082. நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. மாந்தப் பெண்ணாதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினாலான வருத்தங் கூறியது.) 7 (இ-ரை.) நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் - இத்தகைய அழகிய தோற்ற முடையாள் என் நோக்கிற்கு எதிர்நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக் கொண்ட அன்னது உடைத்து தானே தாக்கி வருத்தும் ஒரு தெ-வப் பெண், தனக்குத் துணையாக ஒரு படையையுஞ் சேர்த்துக் கொண்டாற் போலும் தன்மையை யுடையதாம். அழகால் தன்னை வருத்துதல் மேலும், காதல் தோன்றாத எதிர்நோக்கால் தன்னை வருத்துதல் கூறியவாறு. தாக்கணங்கு சூரர மகள். 'தானைக் கொண்டு' எதுகை நோக்கி வலிமிக்கது. 1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு. (இதுவுமது.) (இ-ரை.) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் காலன் என்று சொல் லப்படுவதை இதற்கு முன்பு கேட்டறிந்ததல்லது கண்டறியேன்; இனி அறிந் தேன் இப்போது கண்டறிந்தேன்; பெண் தகையால் பேர் அமர்க்கட்டு அது பெண்டன்மையுடன் பெரிய அமர்த்த கண்களை யுடையது. பெண்டன்மை செயல்களாற் குறிப்பாயறியப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன. அமர்த்தல் போர் செ-தல். 'ஆல்' உடனிகழ்ச்சிப் பொருளது. அழகும் காதல் தோன்றாத எதிர்நோக்கும் அளவிறந்து துன்புறுத்து வதால், கூற்றாக்கிக் கூறினான். 1084. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். (இதுவுமது.) (இ-ரை.) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண்டன்மையுடைய இப் பேதைமையாளுக்குள்ள கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டவரைக் கொல்லும் தோற்றத்துடன் கூடிக் கொடி யனவா யிருந்தன.