பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் களவியல் தகையணங்குறுத்தல் 9 இப் பெண்ணின் சரியாத முலை - மதயானை (இ-ரை.) மாதர் படாமுலைமேல் துகில் களின்மேல் அமைந்த கச்சு; கடாக் களிற்றின்மேற் கண்படாம் யின்மேல் இரு மத்தகங்களையும் மறைக்குமாறு போர்த்த முகபடாத்தை யொக்கும். முலைக்கச்சு மதயானையின் முகபடாத்தை யொப்பது, தோற்றப் பொலிவும் அஞ்சத்தக்கதும் எல்லாரும் தொடமுடியாததுமான இடத்தி லிருப்பதும் பற்றியாம். மாந்தருள் பாகன் தவிர வேறொருவரும் முகபடாத்தைத் தொடமுடியாதது போல, ஆடவருட் காதலன் தவிர வேறொருவரும் முலைக் கச்சைத் தொடமுடியாமை நோக்குக. இரு முலைபோல் இரு மத்தகமிருப்பதும் உவமைக்குத் துணையாம். ஆடவர் கைபடாக் கன்னிமுலை யாதலின், அதன் விடைப்புங் கட்டமைப்புந் தோன்றப் 'படாஅமுலை' என்றார். 'கடாஅ', 'படாஅ’ இசைநிறை யளபெடைகள். மாதர் என்னுஞ் சொற்கு முன்னுரைத்தாங் குரைக்க (குறள். 1081). முலைக்கச்சை நாணுடை மகளிர் மார்பை மறைத்த துகில் என்று, மார்யாப்புச் சேலையாகப் பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. 1088. ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு ணண்ணாரு முட்குமென் பீடு. (அவள் நெற்றியினாலான வருத்தங் கூறியது.) (இ-ரை.) ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத் திற்கு வந்து என் வலிமையை அறியாத பகைவரும் வந்தறிந்தார்வா-க் கேட்டு அஞ்சுதற்கேதுவான என் பெருவலிமை; ஒள்நுதற்கு ஓ உடைந்ததே - இப் பெண்ணின் ஒளிபொருந்திய சிறு நெற்றியொன்றிற்கே ஐயோ! அழிந்து விட்டதே! பெண் என்பது அதிகாரத்தால் வந்தது. பீடு என்பது பெருமை, பேர் முதலியவற்றையுந் தழுவும். 'ஓ' கழிவிரக்கம்பற்றி வந்தது. 'ஓஒ' இசைநிறை யளபெடை. உம்மை எச்சம். ஏகாரம் தேற்றம் "பெருமையும் உரனும் ஆடூஉ மேன" (தொல். களவு. 7) என்று கூறிக்கொள்ளும் பெருமை யெல்லாம் பெண் ணிடத்துச் செல்லாதென்று, காமத்தின் இயல்பு கூறியவாறு. "கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றா ளாம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே' " என்னுந் திருக்கோவைச் செ-யுள் ஈங்குக் கவனிக்கத்தக்கதாம். (திருக்கோ. 21)