பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழுஞ் செங்கதிரால்; சீர்சால் திருக்குறளும் அந்தமிழால் வீசும் அணிமதியால்; - அந்தமதிக் கெட்டிநடை யிட்டவறி வேற்றமே பாவாணர் ஒட்டிநடை யிட்ட உரை. செப்பா லடித்தவொரு காசுக்குச் செந்தமிழை எப்பாலும் விற்கும் இழிஞரிடை - முப்பாலுக் கொத்த மரபுரையொன் றோதினார் பாவாணர்க் கொத்த கடனென் றுணர்ந்து. தேவநே யன்என்னுந் தேர்ந்தமதிப் பாவாணர் தேவத் திருக்குறட்குத் தீர்ந்தவுரை, மேவியபின் மற்றோர் உரைசெயவும் மானுவரோ? மானுவரேல் கற்றோர் நகைப்பர் கலித்து! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்மன் அறக்கட்டவை சென்னை 'பெரியார் 600 017 குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.