பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்குறள் தமிழ் மரபுரை நாகரிகம் முதிர்ந்த நிலையில் நிகழ்ந்த இப் பேரின்பக் களவொழுக் கத்தை, பிறழவுணர்ந்த புல்லறிவாளரும், காக்கை வெளிதென்னுங் காட்டிக் கொடுக்கியரும், கட்டுப்பாடாகத் தமிழைப் பழிக்குங் கடும் பகைவரும். மேனோக்காகத் தமிழைக் கற்ற மேலையறிஞரும், இல்லற வாழ்க்கை யேற் படாத தொன்மைக் காலத்தில் அநாகரிக மாந்தர் ஆடுமாடுகள்போற் கண்ட கண்ட விடத்திற் காமத்தாற் புணர்ந்து திரிந்ததாகக் கருதுவர். அரையாடை யுமின்றி அடவியில் தன்னந்தனியாத் திரிபவன்,கூர் வேலிளைஞர் ஆயிரவர் புடைசூழத் தேரூர்ந்து செல்வனோ? தன் னுணவிற்குந் தானே இயற்கை விளைவைத் தேடித் திரிபவள், நற்றாயொடு செவிலித்தாயும் பேண ஆயிழைத்தோழியர் ஆயிரவரொடு கூடி வாழ்வளோ? கண்ணிற் கினிய வண்ணமும் வடிவுமின்றிக் கருங்காலிக் கட்டைபோல் தோன்றுங் காட்டுப் பெண்ணையுங் கண்டவன். அணங்கு கொல்! ஆ-மயில் கொல்! என்று வியப்பனோ? களவொழுக்கம் கற்பாக மாறுவதும், கற்பு வாழ்க்கையிற் கணவர் காவலுந் தூதும் போரும் வாணிகமும்பற்றி, காலினுங் கலத்தினும் சேணெடுந் தேயமும் செல்லுதல் அநாகரிகக் காலத்திலுண்டோ? இனி அகப்பொருள்பற்றிய தனித்துறைச் செ-யுள்களும் கோவைப் பனுவல் களும், காதல் வாழ்க்கையைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் அறிவியல் முறையிலும் அழகிய பாவடிவிலுங் கூறுவதும், அநாகரிக நிலையைக் காட்டுமோ? இத்தகைய மடமைக்கருத்துக்கள் இக்காலத்தும் எழுந்து பரவற்கு, இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே முதற் கரணியம் என அறிக. இனி, தமிழ்க் களவிற்கும் ஆரியக் காந்தருவத்திற்கு முள்ள மறைவென்னும் ஒருபுடை யொப்புமைபற்றி, "அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே” (களவு.1) என்று தொல்காப்பியர் கூறியுள்ளது கொண்டு, தமிழ்நூற் காதல் முறைகளை ஆரியநூல் மணமுறைகளொடு தொடர்புபடுத்தி, களவொழுக்கமுங் காந்தருவமும் ஒன்றென்று கூறுவர் உரையாசிரியன்மார். கந்தருவரை வானவர் வகையினரென்று வடநூல்கள் குறிப்பதனாலும், “கந்தருவர்க்குக் கற்பின்றியமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே யமையாது "2 (தொல்.களவு. 1, உரை)